அண்மைய செய்திகள்

recent
-

'மன்னாரின் சமர்' மாபெரும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2016

MANNAR DISTRICT FOOTBALL LEAGUE

'மன்னாரின் சமர்' மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க வும் இணைந்து நடாத்தும்  மாபெரும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2016

மேற்படி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது மன்னார் வரலாற்றில் முதல் முறையாக மின்னொளியில் நடாத்தப்படவுள்ளது.

 இதுவரை இல்லாத ஒரு முயற்சியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கானது முன்னெடுத்துள்ளது.

இதற்கு பக்க பலமாக ஜோசவ்வாஸ் நகர் தோட்டவெளி யுனைற்றட் வி க தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வானது 27.02.2016 இன்று தோட்டவெளி ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் மாலை 6.00 மணிக்கு பல பிரமுகர்கள் மத்தியில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

இவ்வரலாற்று நிகழ்வில் பங்குபற்ற சகல உதைபந்தாட்ட இரசிகர்களையும்

அழைக்கின்றோம்.

தகவல்

ப.ஞானராஜ்

செயலாளர்

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
MANNAR DISTRICT FOOTBALL LEAGUE



'மன்னாரின் சமர்'

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க வும் இணைந்து நடாத்தும்  மாபெரும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2016

1. யுனைற்றட்  – ஜோசவ்வாஸ்நகர் - BYE------------------

2. சென் அன்ரனிஸ் - மூன்றாம்பிட்டி - BYE-----------------

3. யுனைற்றட் - அடம்பன் ---------------

4. சென் அன்ரனிஸ் - பொந்தீவுகண்டல் ---------------

5. சென் மேரிஸ் - இலகடிப்பிட்டி ---------------

6. சென் சேவியர்ஸ் - மன்னார் ---------------

7. பொது சன சேவைகள் - முருங்கன் ---------------

8. எவகிறீன் - பெரியகமம் ---------------

9. சென் லூட்ஸ் - மாந்தை ---------------

10. சென் சேவியர்ஸ் - தேவன்பிட்டி ---------------

11. சென் ஜோசப் – காத்தான்குளம் ---------------

12. சென் ஜோசப் - கற்கிடந்தகுளம் ---------------

13. கில்லறி – சாவற்கட்டு - டீலந------------------

14. சென் ஜோசப் - பனங்கட்டுக்கொட்டு - டீலந------------------

15. மருதம் - ஈச்சளவக்கை ---------------

16. சித்திவிநாயகர் -மாளிகைப்பிட்டி ---------------

17. குறோ ஸ்டார் - சாந்திபுரம் ---------------

18. சென் அன்ரனிஸ் - தாழ்வுபர்டு ---------------

19. றீகன் ஸ்டார் -நானாட்டான் ---------------

20. யுனைற்றட்- விடத்தல்தீவு ---------------

21. சென் லூசியா – பள்ளிமுனை ---------------

22. கிறீன் பீல்ட் - சின்னக்கடை ---------------

23. ஜோசவ்வாஸ் குஊ- ஜோசவ்வாஸ்நகர் ---------------

24. சென் ஜோசப் - அச்சங்குளம் ---------------

25. வள்ளுவர் - பண்டிவிரிச்சான் - BYE------------------

26. சென் அன்ரனிஸ்- அந்தோனியார்புரம் -  BYE------------------



போட்டி விதிகள்

1. போட்டிகள்அணிக்கு 9 பேர் கொண்டபோட்டியாக நடைபெறும். 15 வீரர்களின் பெயர்கள்

அணிப்பட்டியலில் இடப்படல் வேண்டும். 03 வீரர்களை மட்டும் ஒரு போட்டியில் மாற்றலாம்.

2. போட்டிகளின் 1ம் 2ம் சுற்றுக்கள் விலகல் முறையில் நடைபெறும்.

3. போட்டி நேரம் 20-05-20 நிமிடங்களாகும். ழுகக ளனைந முறையில் போட்டி நடைபெறும்.

4. போட்டிகள் 27.02.2016ம் திகதி ஆரம்பமாகும். தினமும் மாலை 6.30 மணிக்கு போட்டி

ஆரம்பமாகி 9.30 மணி வரை நடைபெறும்.

5. சகல போட்டிகளும் ஜோசவ்வாஸ்நகர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் தினமும் 03 போட்டிகள் வீதம்

நடைபெறும்.

6. ஓவ்வொரு வெள்ளி இ சனி இ ஞாயிறு தினங்களிலும் போட்டிகள் நடைபெறும்.

7. ஒரு நாளைக்குரிய 03 போட்டிகளுக்குமான கட்டணமாக ஒரு பார்வையாளருக்கு 50.00 அறவிடப்படும்.

அன்றைய போட்டிக்குரிய அணிகளில் தலா 15 வீரர்கள் மாத்திரம் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.

8. ஒரு சிவப்பு அட்டைக்கு 500.00 வும் ஒரு மஞ்சள் அட்டைக்கு 200.00வும் உரிய கழகம் அடுத்த

போட்டிக்கு முன் செலுத்தவேண்டும்.செலுத்தாவிட்டால் தொடர்ந்து ஆட அக்கழகம் அனுமதிக்கப்படமாட்டாது.

தோல்வியுற்ற அணியாயினும் செலுத்த தவறின் அடுத்த சுற்றுப்போட்டிக்கு அனுமதிக்கப்படமாட்டாது.

9. போட்டி சமநிலையில் முடிவுற்றால் தலா 03 தண்ட உதைகளும் அதுவும் சமனாயின் தொடர்ச்சி

முறையும் கடைப்பிடிக்கப்படும்.

10. Boots , Jersey கட்டாயமாக சகலரும் போட்டி முடியும் வரை அணிந்திருக்கவேண்டும்.

11. போட்டி கட்டுப்பணமாக 2000.00 செலுத்த வேண்டும்.

12. போட்டியில் பங்குபற்றாவிட்டால் அடுத்த சுற்றுப்போட்டியில் பங்குபற்ற

அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்துடன் 5000.00 தண்டப்பணமும் செலுத்தவேண்டும்.

13. சகல அணிகளும் தமக்குரிய தினத்தில் மாலை 6.00 மணிக்கு மைதானத்தில் சமூகம் கொடுக்க வேண்டும்.
 போட்டிகள் சரியாக மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

14. கால் இறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் தத்தம் பகுதியிலுள்ள 4 அணிகளுடனும் லீக் முறையில்

ஆடும். இதில் புள்ளி அடிப்படையில் தலா 2 அணிகள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு அரையிறுதிப்

போட்டிகளும் இறுதிப்போட்டியும் நடாத்தப்படும்.

15. உதைபந்தாட்ட சம்மேளன விதிக்கமையவும் மன்னார் லீக்கின் விதிமுறைக்கமையவும் போட்டிகள் நடைபெறும்.

16. உரிய நேரத்திற்கு மைதானத்தில் சமூகம் கொடுக்காவிட்டால் எதிரணிக்கு வெற்றி வழங்கப்படும்.

17. கழக வீரர்களோ ஆதரவாளர்களோ ஒழுக்கவீனமாக நடந்தால் குறித்த வீரர்கள் மீதும் கழகத்தின் மீதும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

18. போட்டி தொடர்பாக சகல முடிவுகளையும் எடுக்க லீக் நிர்வாகத்திற்கு முழு

அதிகாரமுண்டு.

19. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்.

20. தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வேண்டுகின்றோம்.

  லீக் செயலாளர்
'மன்னாரின் சமர்' மாபெரும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2016 Reviewed by NEWMANNAR on February 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.