அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஓர் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு நாம் இது வரை ஒரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை.சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான ஒரு செயற்பாட்டை இதுவரை நாங்கள் முன்னெடுக்கவில்லை எனவும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒருமித்து எடுக்கின்ற முடிவுகள் பல இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.


மன்னார் ஞானோதய மண்டபத்தில் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற 'தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்' என்னும் தலைப்பில் இடம் பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

வெறுமனவே கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற நான்கு அல்லது ஐந்து கட்சிகளாக இருந்து செயல்பட்டோம்.

அந்த கூட்டமைப்பிற்கூடாக நாங்கள் மக்களை ஒரு வாக்களிப்பு இயந்திரமாக மட்டுமே பயண் படுத்தி வந்தோம்.

மக்கள் வடகிழக்கில் சுமார் 40 உள்ளுராட்சி மன்றங்களை எங்களிடம் கையளித்தார்கள்.தற்போது மாகாணசபையையும், பாராளுமன்றத்தையும் ஒப்படைத்துள்ளனர்.


மக்கள் எங்களிடம் ஒப்படைத்த சபைகளை நாங்கள் காத்திரமாக எவ்வாறு நடத்த முடிந்தது என்றால் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது.

நகர சபை மற்றும் மாநகர சபைகள் வரவு செலவுத்திட்டங்களை தோற்கடித்தது உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது.


எனவே கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் நாங்கள் விட்ட இடத்தில் இருந்து ஏதே ஒரு பெயரில் அதாவது தமிழ் தேசிய சபை அல்லது ஏதாவது ஒரு பெயரில் நாங்கள் எல்லோறும் ஒன்றினைய வேண்டும்.


குறிப்பாக மன்னார் மறைமாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மறைமாவட்ட ஆயர் ஓர் செய்தியைச் சொன்னால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அவர்களுக்குப்பின்னால் நிற்கின்ற ஒரு நிலமை இருக்கின்றது.

எனவே அது போன்று நாங்கள் எல்லா மாவட்டத்திலும் ஒரு மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது.

எனவே பல்வேறு பட்ட புத்திஜீவிகள் இருக்கின்றார்கள்.எனவே ஒரு மக்கள் இயக்கம் உடனடியாக தேவையாக உள்ளது.

கடந்த 15 வருடங்களாக முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் நான்கு சுவருக்கள் நாங்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தோம்.

எங்களுடைய கூட்டமைப்பிற்குள்லேயே இன்று முகம் பார்த்து பேச முடியாத அளவிற்கு மாறியுள்ளது.

நான்கு கட்சிகள் கூட்டாக ஒரு முடிவை எடுத்தால் அதில் சிலர் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கின்றனர்.

வெளிப்படைத்தன்மை இன்றி செய்றபடுகின்றனர்.பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் அனைவரும் ஒருமித்த முடிவுக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெறுமனே ஒரு கட்சியினையும்,தனி நபர்களையும் முன்னிலைப்படுத்த முயற்சித்ததன் விளைவாகவே இன்று நாங்கள் இவ்வளவு இழப்புக்களை சந்தித்து இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

என்று கட்சி வருத்தம்,தனி நபர்களின் வருத்தம்,அமைச்சுக்கள், பதவிகள்,பணம்,பட்டம் என்ற எண்ணம் ஏற்படுகின்ற போது நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது.என மேலும் தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்-

(18-07-2016)

-
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஓர் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு நாம் இது வரை ஒரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை.சிவசக்தி ஆனந்தன் எம்.பி. Reviewed by NEWMANNAR on July 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.