அண்மைய செய்திகள்

recent
-

“கிறிஸ்தவர்களின் தமிழ்க் கொடை - தமிழியற் சான்றோர் - பகுதி 2-3” என்ற நூல்வெளியீடு---அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார்...படங்கள் இணைப்பு

அறிமுகப்படுத்தியதில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு மேலானதாகும்
           அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்

தமிழ் மொழியை அதன் இலக்கியச் செல்வங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு மேலானதாகும்.
மகேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட நா. வை. குமரி வேந்தன் அவர்கள் தமிழ் மேல் கொண்ட தீராக் காதலால் தன் பெயரைத் தனித்தமிழில் அமைத்துக்கொண்டுள்ளார். தனது 55வது வயதில் தமிழ் நூல்களைக் கற்க ஆரம்பித்து அவற்றால் ஈர்க்கப்பட்டு தமிழ் ஆய்வாளராகவும் நூலாசிரியராகவும் பரிணமித்துள்ளார்.

   “கிறிஸ்தவர்களின் தமிழ்க் கொடை - தமிழியற் சான்றோர் - பகுதி 2-3” என்ற பெயரில் 420 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை தற்போது வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூலில் தமிழுக்குத் தொண்டாற்றிய ஐந்து கிறிஸ்தவப் பெரியார்களின் வாழ்வையும் பணியையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

  குமரிவேந்தன் குறிப்பிடும் இந்த ஐந்து கிறிஸ்தவத் தமிழ் சான்றோர்களும் பல்வேறு கிறிஸ்தவப் பாரம்பரியங்களில் இருந்து தமது மேலான பங்களிப்பை தமிழுக்கும் சமயத்திற்கும் வழங்கியுள்ளனர்.

ஐரோப்பா- இந்தியா-இலங்கை ஆகிய இடங்களைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் தமிழ் மக்களுக்கும். தமிழ் மொழிக்கும் சிறப்பான தொண்டாற்றியுள்ளனர்.
  ஐரோப்பிய கிறிஸ்தவத் தொண்டர்களில் பலர் மதம் பரப்பும் நோக்கோடுதான் வந்தனர். மத நோக்கங்களுக்காகத் தமிழைக் கற்றபோது தமிழில் உள்ள சிறப்பான இலக்கியங்களால் அவர்கள் கவரப்பட்டனர். தமிழ் மொழியின் தன்னிகரில்லாத் தன்மையை அதன் பெருமையை  சிறப்பைப் புரிந்துகொண்டு தமிழ் மொழியின் இலக்கியங்களை உலகுக்கு வெளிப்படுத்த முயன்றனர்.
 இந்நூலை வாசிப்பவர்கள் இந்த ஐந்து தமிழ்ச் சான்றோர்களைப்பற்றி விரிவாக அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. மதம் என்ற வகையில் கிறிஸ்தவம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
 இச்சான்றோர்களின் வாழ்வும் பணியும் நமது வாழ்க்கை நிலைக்கேற்ப நமக்குச் சில வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றது. நமது தமிழ்ப் பணியில் நம்மை உந்தித்தள்ளி ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

  இன்றைய இக்காலகட்டத்தில் இப்படியானதொரு நூலாக்க முயற்சி எந்தளவுக்கு அவசியமானது? அல்லது தேவையானது? என்ற கேள்வியும் எழுகின்றது. உலகமயமாக்கலில் சிக்குண்டு சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் தாய்மொழிமீதான பற்றையும் பாசத்தையும் வளர்க்க இந்நூல் ஓர் உந்துசக்தியாக அமையும் என நம்பலாம்.

  ஈழத்தமிழர் வரலாற்றில் நாம் உயிர்களை  உடைமைகளை இழந்தாலும் இன்னும் நாம் இழக்காத அல்லது இழக்கக்கூடாத சில சொத்துக்கள் இருக்கின்றன. அவை எதிரிகளால் அழிக்கமுடியாதவை கொள்ளையிட முடியாதவை. அவைதான் நமது மொழி பண்பாடு-கலைகள்! இவற்றின்பால் நாம் நாட்டம்கொள்ள இவற்றை வளர்க்க  வாழவைக்க இதுபோன்ற நூல்கள் நமக்கு விழிப்புணர்வைத் தருவதாக உள்ளது.

கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களின் வாழ்வையும் பணிகளையும் குமரி வேந்தன் அவர்கள் அழகுற வடித்துத் தந்துள்ளார். கற்றோரும் மற்றோரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் இந்நூலை எழுதியுள்ளார்.














“கிறிஸ்தவர்களின் தமிழ்க் கொடை - தமிழியற் சான்றோர் - பகுதி 2-3” என்ற நூல்வெளியீடு---அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார்...படங்கள் இணைப்பு Reviewed by Author on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.