அண்மைய செய்திகள்

recent
-

அமரர் கா.நல்லதம்பி வெற்றிக்கிண்ணம்...பனங்கட்டுக்கொட்டு-B அணிக்கு படங்கள் இணைப்பு...


அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் 03ம் ஆண்டு ஞாபகர்த்த தினத்தை முன்னிட்டு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (ஓவர்)மற்றும் கிராம மட்டத்தின் இளைஞர் யுவதி சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் 26-02- 2017 நடைபெற்று.

 01.03.2017 ம் திகதியன்று காட்டாஸ்பத்திரி ஜங்மேன் விளையாட்டுகழகத்தின் கொடியேற்றத்துடன் அவரின் நண்பர்கள் மற்றும் நலன் விருப்பிகள் ஒத்துழைப்புடன் கழகங்களுக்கிடையிலான  கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் 10 அணி பங்குபற்றி விளையாடியது. இப்போட்டியின் பனங்கட்டுக்கொட்டு-A அணியும் காட்டாஸ்பத்திரி  ஜங்மேன்-A அணியும் மற்றும் பனங்கட்டுக்கொட்டு-B அணியும்- காட்டாஸ்பத்திரி  ஜங்மேன்-B அணியும்
semi-final க்கு தெரிவு செய்யப்பட்டியிருந்தது.

 4 அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுப்பட்டு  இறுதிபோட்டிக்கு பனங்கட்டுக்கொட்டு A அணியும் - பனங்கட்டுக்கொட்டு-B அணியும் தெரிவானது. இறுதிப்போட்டி அமரர் கா.நல்லதம்பி நினைவு தினமான 02.03.2016ம் திகதியன்று பி.ப. 04.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் நண்பர்கள் தலைமையில் நடைபெற்றது. 

விருந்தினர்கள் மற்றும் வீரர்களை கௌரவிக்கும் முகமாக காட்டாஸ்பத்திரி திருவள்ளுவர் முன்பள்ளி சிரார்களுடைய ப்பெண்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றி வணக்கம் செய்யப்பட்டு இறுதிப்போட்டி ஆரம்பிப்பதற்கு

 பிரதம விருத்தினராக  கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் பா.உ 
சிறப்பு விருந்தினராக கொளரவ ஜீ. குணசீலன் வடமாகாண சபை உறுப்பினர்.
கௌரவ விருந்தினர்களாக  மதத்தலைவர்களான தர்மகுமார சர்மா குருக்கள். காட்டாஸ்பத்திரி வேளாங்கன்னி ஆலய பங்குத்தந்தை கிராம சேவகர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம பிரதி நிதிகள்  மற்றும் விருந்தினர்களின் முன்நிலையில் நடைபெற்றது.  இப்போட்டியில் பனங்கட்டுக்கொட்டு-B வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.    

வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.  குறித்த போட்டிக்கு அனுசரனையாளராக வெளிநாட்டு விரும்பிகள்   மற்றும் நண்பர்கள்  நலன் விரும்பிகள் ஆதரவுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.




















அமரர் கா.நல்லதம்பி வெற்றிக்கிண்ணம்...பனங்கட்டுக்கொட்டு-B அணிக்கு படங்கள் இணைப்பு... Reviewed by Author on March 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.