அண்மைய செய்திகள்

recent
-

மஸ்தான் எம்பியின் பங்களிப்புடன் மன்னார் முசலியில் விதாதா வள நிலையம் திறந்துவைப்பு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் பங்களிப்புடன் மன்னார் முசலி பிரதேசத்தில் நேற்று(16.03.2017) விதாதா வள நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தினை அமைச்சர்களான லக்ஷ்மன் செனவிரட்ன, றிசாத் பதியுதீனோடு இணைந்து பாராளுமன்ற உருப்பினர் மஸ்தானும் திறந்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் அவர் உரையாற்றுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியின் பயனாக மீள்குடியேற்ற பகுதிகளுக்கு இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களுக்கு கிடைக்கும் உதவித்திட்டங்களை கொள்ளையடிப்போரைப்பற்றியும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

தற்பொழுது நாட்டில் தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது இதன்மூலம் பல்வேறான
அணுக்கூளங்கள் மக்களுக்கு இருக்கின்றது எனினும் அதனை நாம் கவனத்தில் கொள்வதில்லை.

இந்த சட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளுடைய தனிப்பட்ட விபரங்கள் தவிர்ந்த நிர்வாகம்சார் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவே மக்களாகிய நீங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் அரசியவாதிகளை நாடுவதை தவிர்த்து அரசியலுக்கும் மேலான மக்கள் சக்தியை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

மேலும் எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இராசயனமில்லாத உணவு வகைகளை உற்பத்தி செய்வதற்கு மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன் இந்த பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ள விதாதா வள நிலையத்தை மக்கள் பயன்பெறும் நிலையில் ஆக்கிக்கொள்ளுமாறு அதிகாரிகளையும் மக்களையும் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற மரநடுகை மற்றும் விதாதா வள நிலையத்தில் இடம்பெற்ற செயலமர்விழும் அவர் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான லக்ஷ்மன் செனவிரட்ன , றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












மஸ்தான் எம்பியின் பங்களிப்புடன் மன்னார் முசலியில் விதாதா வள நிலையம் திறந்துவைப்பு Reviewed by NEWMANNAR on March 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.