அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆலடி பிள்ளையார் கோவிலைச் சுற்றி உள்ள மரங்களில் பல நூற்றுக்கணக்கான கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் தஞ்சம்-மக்கள் அசௌகரியம்-(படங்கள் )

மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆலடி பிள்ளையார் கோவிலைச் சுற்றி காணப்படுகின்ற மரங்களில் பல நூற்றுக்கணக்கான கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் தஞ்சமடைந்துள்ளதன் காரணமாக அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசி வருவதோடு,குறித்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவாதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

-மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அதிகலவான மரங்கள் காணப்படடன.
-குறித்த மரங்களில் பல நூற்றுக்கணக்கான கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் கூடுகளை கட்டி வாழ்ந்து வந்தது.

-கடற்பிரதேசமான மன்னார் காணப்படுகின்றமையினால் கடலில் மீன்களை பிடித்து உண்ணும் குறித்த கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் மரங்களில் அமைக்கப்பட்டுள்ள கூடுகளில் உள்ள குஞ்சுகளுக்கு மீன்களையும் கொண்டு வந்து உணவாக கொடுக்கின்றது.
-இதனால் குறித்த மரங்களுக்கு கீழ் பகுதியூடாகவும்,வீதியூடாகவும் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

கொக்குகள் மற்றும் நீர்க்காகங்களின் கழிவுகள் வெளியேற்றப்படுவதினால் அவ்வீதியூடாக செல்லும் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

-இந்த நிலையில் மன்னார் நகர சபையின் முயற்சியினால் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டது.

-இதனால் தஞ்சமடைந்திருந்த கொக்குகள் மற்றும் நீர்க்காகம் ஆகியவை அருகில் உள்ள மரங்களில் தஞ்சமடைந்தது.

-தற்போது ஆலடி பிள்ளையார் கோவிலைச் சுற்றி காணப்படுகின்ற மரங்களிலும், மன்னார் பொது நூலக வளாகத்தில் உள்ள மரங்களிலும் பல நூற்றுக்கணக்கான கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் கூடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றது.

இதனால் ஆலடி பிள்ளையார் கோவிலுக்கு வரும் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக குறித்த பறவைகளின் எச்சங்கள் பக்தர்கள் மீது வீழ்வதினால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

-எனவே ஆலடி பிள்ளையார் கோவில் மற்றும் மன்னார் பொது நூலக வளாகத்தில் உள்ள மரங்கள் போன்றவற்றில் காணப்படுகின்ற கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் வெளியேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மன்னாரிற்கு நாளாந்தம் வெளி இடங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லுகின்ற நிலையில் மாவட்டத்தின் நலனை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் ஆலடி பிள்ளையார் கோவிலைச் சுற்றி உள்ள மரங்களில் பல நூற்றுக்கணக்கான கொக்குகள் மற்றும் நீர்க்காகங்கள் தஞ்சம்-மக்கள் அசௌகரியம்-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.