அண்மைய செய்திகள்

recent
-

101 வயதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம்! அசத்தும் இந்தியன் பாட்டி....


நியூசிலாந்தில் நடைபெற்ற மூத்தோருக்கான உலகப் போட்டியில், இந்தியாவின் 101 வயதான மான் கவுர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

மூத்தோருக்கான உலக மாஸ்டர்ஸ் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

இவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றார். இதே தூரத்தை 2009-ல் 64.42 வினாடிகளில் கடந்த சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இவருடன் யாரும் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இல்லை. இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் அவரை ஓட சம்மதித்தனர்.

100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளதாக மான் கவுர் கூறுயுள்ளார்.


101 வயதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம்! அசத்தும் இந்தியன் பாட்டி.... Reviewed by Author on April 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.