அண்மைய செய்திகள்

recent
-

16 வயதின் கீழ் ஆசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை...


2018ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள 16 வய­திற்­குட்பட்­டோ­ருக்­கான ஆசிய கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரின் தகு­திகாண் போட்­டிகள் இவ்­வ­ருடம் செப்­டம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்­ளன.

இத்­த­கு­திகாண் சுற்றுப் போட்­டியில் மொத்­த­மாக 45 ஆசிய நாடுகள் போட்­டி­யி­டு­கின்­றன. இவ்­வ­ணிகள் மேற்குப் பிராந்­தியம் (23 அணிகள்) மற்றும் கிழக்குப் பிராந்­தியம் (22 அணிகள்) என இரண்டு பிராந்­தி­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒவ்­வொரு பிராந்­தி­யத்­திலும் 5 குழுக்கள் பெய­ரி­டப்­பட்­டுள்­ளன.

போட்­டி­களை நடத்தும் நாடுகள் வெவ்­வேறு குழுக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பிரிக்­கப்­பட்­டன. அதன்­படி 5 அணி­களை கொண்­டுள்ள  5 குழுக்­களும் நான்கு அணி­களை கொண்­டுள்ள 5 குழுக்­களும் காணப்­ப­டு­கின்­றன.

இத்­தொ­டரில் முதல்­மு­றை­யாக பங்­கேற்கும் இலங்கை அணி­யா­னது உஸ்­பெ­கிஸ்தான்இ சவூதி அரே­பியா, ஜோர்தான், பஹ்ரைன் ஆகிய அணி­க­ளுடன் குழு ‘ஏ’இல் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 16 வய­திற்­குட்­பட்ட ஆசிய சம்­பி­யன்ஷிப் தொடரில் உஸ்­பெ­கிஸ்தான் 6ஆவது இடத்­தையும், சவூதி அரே­பியா 11 ஆம் இடத்­தையும் பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நடப்புச் சம்­பி­ய­னான ஈராக் மற்றும் இந்­தியா, பாலஸ்­தீனம், நேபாளம் ஆகிய அணிகள் குழு ‘டி’யிலும் கடந்த முறை இரண்டாம் இடத்தை பெற்­றுக்­கொண்ட ஈரான் மற்றும் கிர்­கிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், லெபனான், பூட்டான் ஆகிய அணிகள் குழு ‘சி’யிலும் போட்­டி­யி­ட­வுள்­ளன.

இரு முறை சம்­பியன் பட்டம் வென்ற அணி­யான வட­கொ­ரியா கடந்த முறை அரை­யி­றுதிச் சுற்று வரை முன்­னே­றி­யி­ருந்­த­துடன் அவ்­ அணி­யா­னது ஹொங்கொங், சைனீஸ் தாய்பே, மெக்கோ, புருனை ஆகிய அணி­க­ளுடன் குழு ‘எவ்’ இல் காணப்­ப­டு­கின்­றது. மற்­று­மொரு பிர­பல அணி­யான ஜப்பான் அணியும் கடந்த தொடரில் அரை­யி­று­தி­யுடன் வெளி­யே­றி­யி­ருந்­தது. அவ்­ அணி இம்­முறை சிங்­கப்பூர், மலே­ஷியா, குவாம் ஆகிய அணி­க­ளுடன் குழு ‘ஜே’யில் போட்­டி­யி­டு­கின்­றன.

குழுக்­களில் முதல் இடங்­களைப் பெற்றுக் கொள்ளும் முதல் பத்து அணிகள்இ இரண்டாம் இடங்­களை பெறும் அணி­களில் சிறந்த ஐந்து அணிகள் மற்றும் போட்­டியை நடத்தும் அணி என 16 அணிகள் இரண்டாம் சுற்­றுக்கு முன்­னே­ற­வுள்­ளன.

ஏனைய அணிகள் விவரம்

குழு ஈ – ஐக்­கிய அரபு இராச்­சியம், ஏமன், கட்டார் (போட்­டி­களை நடத்தும் நாடு), பங்­க­ளாதேஷ்.

குழு பு – தாய்­லாந்து (போட்­டி­களை நடத்தும் நாடு), லாவோஸ், திமோர், வடக்கு மரி­யானா தீவுகள், இந்­தோ­னே­ஷியா

குழு எச் – தென்கொரியா, சீனா, மியன்மார், பிலிப்பைன்ஸ்.

குழு ஐ – வியட்நாம், அவுஸ்திரேலியா, மொங்கோலியா (போட்டிகளை நடத்தும் நாடு), கம்போடியா.

குழு ஜே – ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர், குவாம்.


16 வயதின் கீழ் ஆசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை... Reviewed by Author on April 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.