அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொதுவைத்தியசாலைக்கு சுகாதரா அமைச்சர் வருகை குறைகள் தீர்க்கப்படுமா ?

மன்னார் மாவட்டத்திற்கு தற்போது நல்ல காலம் வேலை செய்கின்றது போல் ஏன் என்றால் அபிவிருத்திப்பணிகள் துரிதகதியில் நிகழ்கின்றது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அபிவிருத்திப்பணி….

இதற்கு முக்கியகாரணம் என்னவென்றால் மாண்புமிகு ஜனாதிபதி கௌரவ அமைச்சர்களின் திடீர் வருகையால் என்றால் மறுப்பதற்கு இல்லை முன்னைய காலங்களில் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும் ஓட்டுக்களை பெற்றுக்கொள்ளுவதற்கான வருகையாகவும் தான் இருந்தது. ஆனால் தற்போதையவருகையானது உண்மையில் அபிவிருத்திப்பணிக்காண வருகையாக அமைகின்றது மகிழ்ச்சிக்குரியது.

  • மாண்பு மிகு ஜனாதிபதி
  • விளையாட்டுத்துறை அமைச்சர்
  • வணிகஅமைச்சர்
  • மீன்பிடி அமைச்சர்
  • உள்விவகாரஅமைச்சர்
  • கலாச்சார மற்றும் நல்லிணக்க அமைச்சர் மற்றும் ஏனைய மாகாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் வரகையோடு குறிப்பாக நாளைக்கு சுகாதார அமைச்சரின் வருகையும் இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சரின் வருகை தற்போது மன்னார் மாவட்டத்தின் அதிமுக்கிய தேவையாகவும் அவசியமானதான ஒன்றாகவும் அமைகின்றது.
காரணம் எமது மன்னார் மாவட்டத்தின் பல அபிவிருத்திப்பணிகள் இருந்தாலும் நடைபெற்றுக்கொண்டு இருந்தாலும் முக்கியமான நீண்டகாலப்பிரச்சினையாக மன்னார் மக்களின் உயிரோடு விளையாடுகின்ற மன்னார் பொதுவைத்தியசாலையின் நிலமைதான் இங்கு சுட்டிக்காடடப்படவேண்டிய விடையமாகவுள்ளது…

தாரவைத்தியசாலையாக உள்ள பொதுவைத்தியசாலைக்கு முதல் விரும்பியும் நம்பிக்கையுடனும் செல்லுகின்ற நோயாளிகள் தற்போதைய சு10ழலில் பயத்துடனும் வேறுவழியில்லாமலும் செல்ல வேண்டிய துப்பார்கிய நிலை காணப்படுகின்றது. இதற்கு
காரணம் கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட மர்ம மரணங்கள் தான் காரணம் ஒன்று இரண்டல்ல றிறையவே நடந்துள்ளது இன்னும் நடந்துகொண்டும் இருக்கின்றது. முடிவில்லாமல்…


   இதற்கு காரணம் கேட்டால்…
  •     போதியளவு தளபாடங்கள் இல்லை
  •    தகுந்த தரமான துறைசார்ந்த மருத்துவர்கள் இல்லை
  •    கட்டிட வசதியில்லை
  •     அதிநவீன கருவிகள் ஸ்கானர் இசியி எக்ஸ்ரே இன்னும் நவீனதொழிநுட்ப கருவிகள் இல்லாமையும் அதனை பயன்படுத்தமுடியாமையும்.
  •     இன்னும் நவீனமயப்படுத்தாத அறுவைச்சிகிச்சை அறைகள்
  •     சிறப்பு பிரிவு நோய் பிரிவு துறைகள் இல்லை.
  •     நோயாளர் விடுதிகளும் அவர்கள் பாவிக்கும் மலசலகூடங்கள் ஜயோ…!
  •     சுத்தம் சுகாதாரம் பேணப்படுவதில்லை
  •     நோயாளர்கள் மட்டில் சில தாதிகள் ஆண்-பெண் இருபாலரும் தரக்குறைவான பேச்சும் நடத்தை முறையும்.
  •     வைத்தியசாலை வளாகத்தினுள்ளே டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அத்தனை வசதிகளும் உள்ளது…

இப்படி இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் இங்கே குறைகளை சுட்டிக்காட்டுவது எமது நோக்கமல்ல இந்த குறைகள் எல்லாம் நிறைகளாக எப்போது மாறும் என்ற கேள்விகள் தான்….

இவ்வளவும் இருக்க நாளை சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு அவசரஅவசரமாக பல பணிகள் பாவனைக்கு உதவாத மலசலகூடங்கள் அடைப்பு அமைச்சர் வந்து போகும் இடங்கள் துப்பரவு வர்ணப்பூச்சு நோயாளர்கள் தடுத்துவைப்பு இன்னும் இதரப்பணிகள் தடல்புடலாக நடைபெறுகின்றது….

வருகின்ற சுகாதார அமைச்சர்களிடம்….வைத்தியசாலை நிர்வாகம் என்ன சொல்லப்போகின்றது தாங்கள் சரியாகத்தான் செயற்படுகின்றோம் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை மருத்துவர்கள் தங்குவதற்கான கட்டிடம் வேண்டும் என்று கேட்பார்கள் இல்லையேல் மருத்துவர்கள் பற்றாக்குறை என்று சொல்வார்கள் வேறு என்ன கேட்கப்போகின்றார்கள்….
மன்னார் பொதுவைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குழு இருக்கின்றது அந்தக்குழு என்ன சொல்லப்போகினறது…..

மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் மக்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் மன்னார் பொதுவைத்திய சாலைக்கு என்னதேவை என்பதை வருகின்ற சுகாதார அமைச்சருக்கு தெரியப்படுத்துங்கள்….
மன்னார் பொதுவைத்தியசாலை உயர்அதிகாரிகளே தயவுசெய்து மக்களுக்கு தேவையான மருத்துவ வசதியினை சிறப்பான முறையில் செய்வதற்கு தங்களுக்கு என்ன அவசியமாய் அவசரமாய் தேவையென்பதை வருகைதருகின்ற சுகாதார அமைச்சருக்கு தெரியப்படுத்தி வளத்தினைப்பெருக்கி வளமான வாழ்வுக்கு சிறப்பான சேவையாற்ற முன்வரவேண்டும்.

குறைகளை நிறைகளாக்குவோம்….

கட்டிடங்களும் கருவிகளும் இருந்து பிரியோசனம் இல்லை கடமையுணர்வும் கடவுள்பக்தியுடன் செயலாற்றவேண்டும் ஏன் எனில் கடவுளுக்கு நிகராய் நோயாளிகள் உங்களைத்தான் நம்புகின்றார்கள் கைகூப்பி தொழுகின்றார்கள் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுங்கள்…


மன்னாரின் எழுச்சி
-மன்னார்விழி- 

மன்னார் பொதுவைத்தியசாலைக்கு சுகாதரா அமைச்சர் வருகை குறைகள் தீர்க்கப்படுமா ? Reviewed by Author on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.