அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிக்குளம் மக்களின் காணிகளில் உள்ள 27 வீடுகளிலும் குடியமர்ந்துள்ள கடற்படையினரின் இடமாற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும்- கடற்படை அதிகாரி உறுதி.


விடுவிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளில் உள்ள 27 வீடுகளிலும் குடியமர்ந்துள்ள கடற்படையினரின் குடும்பத்தினர் 6 மாத காலத்தினுள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு குறித்த வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும் என கடற்படை தளபதி உறுதியளித்துள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை கடற்படையினர் விடுவித்துள்ள நிலையில் அந்த மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது சொந்த இடத்திற்குச் சென்றனர்.

இதன் போது நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுத்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அருட்தந்தை அன்ரன் தவராசா அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,
முள்ளிக்குளம் மக்கள் தற்போது ஆலயம் சார்ந்த பகுதிகளில் தங்கியுள்ளனர்.மக்கள் எந்த பாதையை பயண்படுத்துவது,எங்கு செல்வது,எவ்வாறு அவர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்வது பற்றி நாங்கள் கலந்துரையாடல் செய்வதற்கு இங்குள்ள கடற்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் சிறிய குழுவாக செயற்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமூகமான முறையில் முடிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

ஆலயத்தில் இருந்து கொண்டு தற்காலிக குடிசைகளை அமைக்கவுள்ளனர்.கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் காணிகளை விரிவுபடுத்தவுள்ளோம்.

-மீனவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி முள்ளிக்குளம் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட முடியும் எனவும்,இங்குள்ள கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்

முள்ளிக்குளம் மக்களின் காணிகளில் உள்ள 27 வீடுகளிலும் குடியமர்ந்துள்ள கடற்படையினரின் இடமாற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும்- கடற்படை அதிகாரி உறுதி. Reviewed by Author on May 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.