அண்மைய செய்திகள்

recent
-

திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேகரிப்பு மன்னாரில் ஆரம்பம்-SLRC

இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரண கால நிலை காரணமாக பாதீக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையூடான மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண சேகரிப்பிற்கு மன்னார் மாவட்ட மக்களை பூரண ஆதரவை வழங்குமாறு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் ஜே.ஜே.கெனடி தெரிவித்தார்.

-மன்னார் மாவட்டத்தில் நிவாரண சேகரிப்பு தொடர்பாக அவர் இன்று(31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,


-தென் பகுதியில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தினபுரி, காலி, மாத்தறை,களுத்துறை,கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய 6 மாவட்டங்கள் அதிகளவில் பாதீக்கப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தத்தினால் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு,சுமார் 100 இற்கும் அதிகமானவர்கள் காணாமல் பேயுள்ளனர்.மேலும் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதீக்கப்பட்டுள்ளதோடு,76 ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர்.

பாதீக்கப்பட்ட மக்களுக்கு மனிதாவிமான முறையில் உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரின் தலைமையில் பாதீக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் நிவாரணம் சேகரிப்பது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) மன்னார் ஆயர் இல்லத்தில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் மன்னார் ஆயர் இல்லம்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை,மன்னார் வாழ்வுதயம் ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

எனவே மன்னார் மாவட்ட மக்கள் பாதீக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தங்களினால் இயன்ற உதவிகளை வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

எனவே தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்பதாக மன்னார் கத்தோழிக்க பங்கு பணிமனைகள்,மன்னார் கரிதாஸ் வாழ்வுதயம்,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை,இந்து ஆலயங்கள்,பள்ளிவாசல்கள் ஆகிய இடங்களில் நிவாரணப்பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்கி வைக்க முடியும் என இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் ஜே.ஜே.கெனடி மேலும் தெரிவித்தார்.
திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேகரிப்பு மன்னாரில் ஆரம்பம்-SLRC Reviewed by NEWMANNAR on May 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.