அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் உலக சுற்றாடல் தினம் சிறப்பாக நடைபெற்றது

உலக சுற்றாடல் தினம் சமுத்திரங்கள் தினம் - 05-06-2017.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் உலக சுற்றாடல் தினம் மற்றும் சமுத்திரங்கள் தினம் மன் /பாப்பாமோட்டை றோ.க.த.க பாடசாலையிலும் பாப்பாமோட்டை கடற்கரையிலும்  UNOPS, UNDP நிறுவனங்களின் நிதி அனுசரனையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினர்களாக, திருமதி எஸ்.எஸ் செபஸ்ரியான் வலயக் கல்விப் பணிப்பாளர், மன்னார், திருமதி.மாலினி வெனிற்றன் வலயக் கல்விப் பணிப்பாளர், மடு அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வனவள அதிகாரி திரு.E.J.M,J.K..ஏக்கநாயக்காவும், UNOPS நிறுவனத்தின் திட்ட பொறியியலாளர் திரு.P.அனுதர்சன் அவர்களும், ருNனுP நிறுவனத்தின் களத்திட்ட நிபுணர் திரு.s.ஓகஸ்ரின்; அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மன்னார் மாவட்டப் பொறுப்பதிகாரி கலாநிதி. திருமதி. ஹிமலதா உரையாற்றுகையில் தாவரங்களும் விலங்குகளும் சுற்றாடலின் உயிர் மூலக் கூறுகளாகும். இயற்கையின் சமநிலையைப் பேண மனங்கவர் மரஞ் செடி கொடிகள் வளர்ப்போம் நாளைய சந்ததியினர் பற்றி சிந்திப்போம் எனவும் கூறினார்.
இதனை அடுத்து பிரதம விருந்தினரான மாவட்ட செயலாளர் கௌரவ எம். வை. எஸ்;. தேசப்பிரிய அவர்கள் உரையாற்றுகையில் நாடளாவிய ரீதியில் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஆண்டுகளில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வினை வழங்குமிடத்து சிறப்பாக கழிவுகளை தரம் பிரித்து வழங்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் கழிவு முகாமைத்துவத்தினை இலகுவாக நடைமுறைப்படுத்தலாம் என்றும் இதன் மூலம் நமது மாவட்டத்தின் சுற்றாடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறினார்
குறித்த நிகழ்வின் பொழுது 100 நிழல் மரங்களும், 25 பழமரக்கன்றுகளும் 100 கண்டல் தாவரங்களும் நடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மரநடுகையின் முக்கியத்துவம் தொடர்பான பேச்சுப் போட்டியும், வினாவிடைப் போட்டிகளும் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கழிவு முகாமைத்துவத்திற்கான கழிவு சேகரிக்கும் தொட்டிகள் இந் நிகழ்வில் பங்குபற்றிய 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டன,




மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் உலக சுற்றாடல் தினம் சிறப்பாக நடைபெற்றது Reviewed by NEWMANNAR on June 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.