அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை நாட்டின் கட்டமைப்பு கடந்த காலங்களில் பாரியளவில் அழிவடைந்து காணப்பட்டது-இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா-(படம்)

ஜப்பான் நாட்டு அரசாங்கத்திற்கும்,இலங்கை அரசுக்கும் இடையில் மிக நெருங்கிய நற்புறவு காணப்படுகின்றது.அந்த வகையில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் இலங்கையில்  பல்வேறு வேளைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதன் ஒரு அங்கமாகவே மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மன்-பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக்கட்டிடமும் அமைவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார்.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மன்-பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக்கட்டிடம் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

-இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த வகுப்பறைக்கட்டிடத்தை திறந்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,,

-மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட்ட குறித்த பாடசாலையின் கட்டிடத்திறப்பு விழாவில் நான் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

-குறித்த பாடசாலை கட்டிடத்தை யூ.என்.கெபிட்ட நிறுவனம் மிகவும் சிறப்பான முறையில் கட்டி முடித்துள்ளது.
-இலங்கை நாட்டின் கட்டமைப்பு கடந்த காலங்களில் பாரியளவில் அழிவடைந்து காணப்பட்டது.தற்போது இலங்கை நாடு பாரிய வளர்ச்சிப்பதையில் செல்கின்றது.

-அந்த வகையில் மாணவர்களாகிய நீங்கள் நாட்டிற்கு கிடைக்கின்ற உதவிகளை நல்ல முறையில் பயண்படுத்தி உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றி முன்னேற வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் எமது நாட்டு மக்களின் கலாச்சாரம்,மற்றும் மக்களின் திறமைகள் குறித்து அறிந்து கொண்டிருப்பீர்கள்.

இலங்கையின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே தங்கியுள்ளது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எனவே சிறுவர்களாகிய உங்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது.இலவச கல்வியை நல்ல முறையில் கற்று உங்கள் வாழ்க்கையை முன்னெற்றப் பாதைக்கு இட்டுச் சென்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.என மேலும் தெரிவித்தார்.
இலங்கை நாட்டின் கட்டமைப்பு கடந்த காலங்களில் பாரியளவில் அழிவடைந்து காணப்பட்டது-இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா-(படம்) Reviewed by NEWMANNAR on June 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.