அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னாள் மக்கள் ஆர்ப்பாட்டம்.....



மேற்குறித்த விடையம் தொடர்பாக அறியவருவது என்னவென்றால்
  மலேரியா நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்காக வீடுகளிலும் வளவுகளிலும் உள்ள கினறு சம்-தொட்டி நீர் நிலைகள் மீது மலேரியா நுளம்பு பெருக்கத்துக்கு தடையாக போடப்படும் "அபேற்" எனும் இரசாயன கலவை பொட்டலங்கலால்  குடிநீர் நிலம் வளி போன்றவை மாசுபடுவதாகவும் உடலில்  கடி-சிரங்கு-முடிகொட்டுதல் -சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்தொற்றுக்கள் ஏட்படுகின்றது என்பதனை வலியுறுத்தி அதை உடனடியாக தடுத்து இரசாயனக்கலவைக்கு பதிலாக மீன்குஞ்சுகளை விடுமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தினை 
மன்னார் எமில்நகர்-பனங்கட்டு கொட்டு-ஜிம்றோன் நகர் 
ஜீவபுரம் கிராமங்களைச்சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் முன்னெடுத்தன  சம்பவ இடத்திற்கு வந்த..................................................................................
DR.றோயல் பீரிஸ்- பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.அரவிந்தன்  பிராந்திய வைத்திய மலேரியா நோய்தடுப்பு இயக்க அதிகாரி
DR.ரூபன் M.O.H.MANNAR
வைத்தியர்கள் இவ்விடையம் தொடர்பாக இவ்விரசாயனமானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
50 வருடங்களுக்கு மேலாகபாவிக்கப்படுகின்றது.
 இதனால் சிறுநீரகபாதிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாது என்றும் மக்களின் வேண்டுகோளுக்கினங்க இன்றிலிருந்து இரசாயனக்கலவையை  பாவிப்பதை நிறுத்துவதாகவும் மிகவிரைவில் இது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஏற்பாடு செய்வதாகவும்  மக்களாகிய உங்களை அழைப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு கேட்டத்திற்கு இனங்க...

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைப்பினர் மக்கள் மகஜர் ஒன்றினை  வைத்தியர்களிடம் கையளித்தோடு மிகவிரைவாக நல்ல முடிவை எடுங்கள் இல்லையேல் மன்னார் மாவட்டத்தில் உள்ள எல்லா அமைப்புக்களையும் இணைத்து பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியே கலைந்து சென்றனர்.
















-VMK-
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னாள் மக்கள் ஆர்ப்பாட்டம்..... Reviewed by Author on July 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.