அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிலாவத்துறை அஞ்சல் உபதபாலகம் புதிய அலுவலகமாக புனரமைக்கப்படுமா…..???



மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்த மட்டில் நிறைய திட்டங்கள் மூலம் இடங்கள் அபிவிருத்தி செய்யவேண்டி உள்ளது அதில் ஒன்றாக
மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறையில் சவேரியார்புரத்தில் முத்தரிப்புத்துறை பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள உப தபாலகமானது நீண்டகாலமாக கிட்டதட்ட 30 வருடங்களுக்கு மேல் பழைய உடைந்து கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

இவ் அஞ்சல் உபதபாலகத்தினை நம்பி சுமார் மூன்று கிராமங்கள் அதாவது சிலாவத்துறை சவேரியார்புரம்(புதுக்குடியிருப்பு) முசலி இந்த மூன்று கிராமத்திலும் சுமார் 800 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர்.

எவ்வளவு தான் நவீனங்கள் வந்தாலும் தபாலகத்தின் சேவையும் தேவையும் மக்கள் மத்தியில் இருந்து பிரிக்கமுடியாதவொன்று என்றால் அது பொய்யல்ல….
இந்த அஞ்சல்தபாலகமானது மிகவும் அசிங்கமாகவும் களஞ்சிய அறைபோன்று  அதேநேரம் துப்பரவின்றியும் இருக்கின்றது.
காரணம் பகலில் தபாலகமாக இயங்கினாலும் இரவில் கழுதை மாடுகள் நாய்களின் வசிப்பிடமாகவும் வழிப்போக்கர்களின் வாழ்விடமாகவும் உள்ளது அதனால் துப்பரவின்றி காணப்படுகின்றது.

தபாலகத்தின் சுவர்கள் மற்றும் மேற்பகுதிகள் உடைந்து உள்ளது அதனால் இனிவருகின்ற  சிலமாதங்களில் மழைவரப்போகின்றது மழைவந்தால் தண்ணீர் உள்ளே வரும் வெள்ளம் நிற்கும் தபால்சேவைகள் பாதிக்கப்படும் அங்கு பணிபுரிபவர்களுக்கும் சிரமம்தான்,
  
மக்களின் அதிகமான தேவையயை பூர்த்தி செய்கின்ற அஞ்சல் தபாலகமானது இப்படியிருப்பது நல்லதா… 

இதை புனரமைப்பதற்கு இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுமக்களின் விருப்பமின்மையா............. இல்லை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அசமந்தப்போக்கா….......

ஏன் இன்னும் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள் உடனே விரைந்து செயற்படுங்கள் ஒவ்வொருவரும் தங்களது கடமையினை சரிவச்செய்தால் மன்னார் மாவட்டமானது மிகவிரைவில் அபிருத்தி அடையும் என்பது உண்மை.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிகவிரைவாக இப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பும் ஆசையும் ஆகும் நிறைவேறுமா….  

-மன்னார்விழி-

















மன்னார் சிலாவத்துறை அஞ்சல் உபதபாலகம் புதிய அலுவலகமாக புனரமைக்கப்படுமா…..??? Reviewed by Author on July 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.