அண்மைய செய்திகள்

recent
-

20000 பேருக்கு சிக்கல்....வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்:


சைபிரஸ்சில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது.

கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி நண்பருடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக 24ஆம் திகதி அதிகாலை என்டனி சமரகோன் என்ற இலங்கையர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை மேற்கொண்ட நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்தகராறு கொலையில் முடிந்ததாக சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் நகரத்தில் உயிரிழந்த என்டனி தொடர்பில் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த நாட்டில் சேவையில் ஈடுபடும் 20000 இலங்கையர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலையின் பின்னர் சைப்பிரஸிலுள்ள தொழில்தருநர்கள், தினசரி வேலைகளுக்கு ஆண்களை அழைக்க விரும்புவதில்லை எனவும், இதனால் இலங்கைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீசா இன்றி சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த நிலையில் உயிரிழந்த என்டனி சமரகோனின் சடலம் சைபிரஸிலுள்ள இலங்கை தூதரக அலுவலக தலையீட்டில் நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

20000 பேருக்கு சிக்கல்....வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்: Reviewed by Author on August 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.