அண்மைய செய்திகள்

recent
-

இடியாப்பத்திற்கு அருமையான மட்டன் குருமா....


இடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி, புலாவ், ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள மட்டன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இடியாப்பத்திற்கு அருமையான மட்டன் குருமா
தேவையான பொருட்கள் :

மட்டன் - ஒரு கிலோ
கடலை எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ஒன்று

அரைக்க :

சின்னவெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 10
கசகசா - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 எ
பட்டை - சிறிதளவு
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
முந்திரிப்பருப்பு - 20 கிராம்

செய்முறை :

தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மட்டனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து லேசாக வதக்கி, பேஸ்டாக அரைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்துத் தாளிக்கவும்.

பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மட்டனைச் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மட்டனை வேகவிடவும்.

மட்டன் வெந்ததும் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதி வருவதற்கு முன்னர் இறக்கிப் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இடியாப்பத்திற்கு அருமையான மட்டன் குருமா.... Reviewed by Author on August 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.