அண்மைய செய்திகள்

recent
-

யூகோஸ்லாவியா விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்த நாள்: 10-9-1976



1976-ஆம் ஆண்டு பிரிட்டன் விமானம் ஒன்று யூகோஸ்லாவியாவின் சாக்ரெப் என்ற நகரில் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சுமார் 176 பேர் உயிரிழந்தனர்.

யூகோஸ்லாவியா விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்த நாள்: 10-9-1976
1976-ஆம் ஆண்டு பிரிட்டன் விமானம் ஒன்று யூகோஸ்லாவியாவின் சாக்ரெப் என்ற நகரில் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சுமார் 176 பேர் உயிரிழந்தனர்.

  • 1898 ஆண்டு இதே தேதியில் எலிசபெத் தனது 60வது வயதில் ஜெனீவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ‘லுயிஜி லூச்சினி’ என்ற தீவிரவாதியினால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

ஆஸ்திரியா அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்ட நாள்: 10-9-1898
பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானார். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினார்.

அக்காலத்தில் மிகவும் அழகானவர் எனப் பெயரெடுத்திருந்த எலிசபெத், தனது உடலழகைப் பேணுவதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார். 1889 ஆம் ஆண்டில் இவர்களது ஒரே மகனும் அரச வாரிசுமான ருடோல்ஃப் 30 வயதிலேயே அவரது காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து எலிசபெத் தனது கடைசிக் காலத்தில் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் தனது காலத்தைக் கழித்தார். 1898 ஆண்டு இதே தேதியில் எலிசபெத் தனது 60வது வயதில் ஜெனீவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ‘லுயிஜி லூச்சினி’ என்ற தீவிரவாதியினால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1846 - எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

• 1858 - 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

• 1931 - பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

• 2000 - மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.


யூகோஸ்லாவியா விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்த நாள்: 10-9-1976 Reviewed by Author on September 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.