அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் சாலை விபத்துகளில் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் பலி - அதிர்ச்சி தகவல்


இந்தியாவில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மணிக்கு 17 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி, 2016 ஆண்டிற்கான விபத்து குறித்த அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நாட்டில், கடந்த ஆண்டு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகள் நடந்து 17 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மொத்தம் 4,80,652 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 1,50,785 பேர் மரணமடைந்துள்ளனர். 4,94,624 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 46.3 சதவீதம் பேர் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.

மேலும் 86 சதவீதம் விபத்துகள் 13 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. அவை தமிழ்நாடு, மத்தியப்பிரேதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அரியானா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா.


இந்தியாவில் சாலை விபத்துகளில் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் பலி - அதிர்ச்சி தகவல் Reviewed by Author on September 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.