அண்மைய செய்திகள்

recent
-

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது (செப்.18- 1934)


சோவியத் ஒன்றியம் என்பது 1922-ல் இருந்து‍ 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945-ல் இருந்து 1991-ல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது (செப்.18- 1934)
சோவியத் ஒன்றியம் என்பது 1922-ல் இருந்து‍ 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945-ல் இருந்து 1991-ல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.

இது, 1917-ல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந்நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945-ல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம்.

எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து‍ நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின. 1930-களில் சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டது.

1933-ல், அமெரிக்க நாடுகளும், சோவியத் யூனியனும் பரஸ்பரம் அங்கீகரம் கொடுத்து தூதுவர்களை அனுப்பித்தன. அதன்பின் அதிகாரப்பூர்வமாக 1094-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1851 - நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதன் முதலில் வெளியிடப்பட்டது.
 * 1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற 'அட்லாண்டா மத்தியஸ்தம்’ என்ற சொற்பொழிவை ஆற்றினார்.
* 1906 - ஹாங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10 ஆயிரத்துக்கும் பேர் கொல்லப்பட்டனர்.
* 1911 - ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார். * 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்க படைகள் ஜெர்மனியின் தென் மேற்கு ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.
* 1919 - நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

* 1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது.
 * 1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
* 1932 - நடிகை பெக் எண்ட்விசில் ஹாலிவுட் சின்னத்தின் "H" எழுத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 * 1939 - இரண்டாம் உலகப் போர்: இக்னேசி மொஸ்கிக்கி தலைமையிலான போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1943 - இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் டச்சு, ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
* 1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
* 1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
* 1962 - ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.
* 1964 - வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.
* 1968 - இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
* 1972 - இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
 * 1974 - சூறாவளி ஹோண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.

* 1976 - பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
* 1977 - வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
 * 1980 - சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
* 1982 - லெபனானில் கிறிஸ்தவ துணை ராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
 * 1988 - பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.

* 1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
* 1997 - 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
* 2006 - கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* 2007 - மியான்மாரில் பௌத்த துறவிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது (செப்.18- 1934) Reviewed by Author on September 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.