அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய என்ஜினீயரின் மனைவிக்கு தற்காலிக பணி விசா


அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த என்ஜினீயரின் மனைவிக்கு தற்காலிக பணி விசா வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த என்ஜினீயரின் மனைவிக்கு தற்காலிக பணி விசா வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா (32). இவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார். கடந்த பிப்ரவரியில் கன்சாஸ் புறநகர் பகுதியான ஓலாகேவில் உள்ள பாருக்கு ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது அமெரிக்கர் ஒருவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவிடம் தகராறு செய்தார். ஸ்ரீனிவாசை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனயனா துமாலா(32)வுக்கு தற்காலிக பணி விசா வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், சுனயனா துமாலாவின் கணவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா கடந்த பிப்ரவரியில் கொல்லப்பட்டார். அதைதொடர்ந்து சுனயனா துமாலா அமெரிக்காவில் தங்குவதற்கு இப்போதைய விசா நடைமுறைகள் தடையாக இருந்தது. கணவரை இழந்து வாடும் சுனயனா, அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது நிலையை கருத்தில் கொண்டு தற்காலிக பணி விசா வழங்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய என்ஜினீயரின் மனைவிக்கு தற்காலிக பணி விசா Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.