அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் வடக்கு சமுர்த்தி சிறுவர் தின கொண்டாட்டம்.-படம்


மன்னார் உப்புக்குளம் வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில்,சமுர்த்தி பயனாளிகள்,மற்றும் சமுர்த்தி சிறுவர் கழகத்தினர் ஆகியோறின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை(23) மாலை 4 மணியளவில் மன்னார் உப்புக்களம் அல்-பதாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

மன்னார் உப்புக்குளம் வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்விற்பு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,சிறப்பு விருந்தினராக மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் திருமதி கே.சிவசம்பு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உப்புக்குளம் வடக்கைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள்,மற்றும் சமுர்த்தி சிறுவர் கழகத்தினர் கலந்து கொண்டதோடு,இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் உப்புக்குளம் வடக்கு சமுர்த்தி சிறுவர் தின கொண்டாட்டம்.-படம் Reviewed by NEWMANNAR on October 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.