அண்மைய செய்திகள்

recent
-

இது மட்டும் போதும்: எந்த நோயும் அண்டாது -


இருமல், சளி, காய்ச்சல் என்றவுடனேயே மருத்துவரை நாடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே கட்டுப்படுத்தலாம்.
உணவே மருந்து என்ற கூற்றுப்படி சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் மூலம் சூப் தயாரித்து அருந்துவது பலனை தரும்.

சூப் உருவான கதை உங்களுக்கு தெரியுமா?
நம் பாரம்பரிய சமையலில் ஒன்று ரசம், இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப். நம்முடைய மிளகு ரசத்துக்கு இணையான சத்து உள்ள சூப், எதுவுமே இல்லை என்பதே உண்மை.
ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள் உடலுக்கு நல்லது. நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும், அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும்.
தேவையான பொருட்கள்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி – 1 துண்டு
  • பட்டை – சிறிதளவு
  • வெள்ளை பூண்டு – 10 பற்கள்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • தனியா – சிறிதளவு
  • கிராம்பு – 7
  • தண்ணீர் – 750 ml
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, 1/2 டீஸ்பூன் சீரகம், மிளகு, மஞ்சள் தூள் மற்றும் தனியாவை சேர்க்கவும்.
நன்கு கிளறிய பின்னர் இதனுடன் பட்டை, கிராம்பு, இஞ்சி சேர்த்து தேவையான உப்பை சேர்த்து கிளறவும்.
பின்னர் தண்ணீரை ஊற்றி, மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
சூப்பில் இருக்கும் தண்ணீரை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும், இதனுடன் தேன் கலந்தால் சுவையான சூப் ரெடி.
காலை, மாலை என இருவேளைகளுக்கு இதனை பருகி வந்தால் உடல் வலி சரியாகும், சளித்தொல்லை உள்ளவர்கள் இதை பருகுவது பலனைத் தரும்.
யாருக்கு என்ன சூப்?
  • டிபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமாக உள்ளவர்கள், தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டன் சூப்
  • கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு நெஞ்சு எலும்பு சூப்
  • பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தைக்கு வெஜ் பாயில் சூப்
  • கீரைகளைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு, கீரை சூப் மற்றும் தக்காளி சூப்
  • எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, மட்டன், சிக்கன் சூப்
  • நார்மலாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, வெஜ் சூப் என கொடுக்கலாம்
குறிப்பாக அசைவ சூப்களை தொடர்ந்து குடிக்கக்கூடாது, இது கொழுப்புச் சத்தை அதிகரிக்கச் செய்து, வேறு பிரச்னைகளுக்கு வழி ஏற்படுத்திவிடும்.
இது மட்டும் போதும்: எந்த நோயும் அண்டாது - Reviewed by Author on January 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.