அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வெள்ளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல்.



மன்னார் வெள்ளாங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கணேசபுரம் இந்தியன் குடியிருப்புää சேவாகிராமம் ஆகிய கிராமங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட கிராமங்களாகும். இங்கு யுத்தத்தில் பல இழப்புக்களை சந்தித்த மக்களும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் கூடுதலாக இக்கிராமத்தில் வசித்து வருகின்றார்கள.

இப்பகுதியில் உள்ள மாணவர்கள் சுமார் 03 கி.மீ தூரமுள்ள வெள்ளாங்குளம் பாடசாலையில் கல்விகற்று வருகின்றனர். போக்குவரத்து சீரற்று இருப்பதால் மாணவர்கள் நடந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலைதனை கருத்தில் கொண்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் முயற்சியினால் சென்ற ஆண்டு ஆரம்ப பகுதியில் கணேசபுர பகுதியில் மன்/கணேசபுர ஆரம்ப பாடசாலை இயங்குவதற்கான அனுமதி வடமாகாண கல்வி அமைச்சால் வழங்கப்பட்டு மடு கல்வி வலயத்தால் வகுப்பறைக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டு 02.01.2018 அன்று மடுக்கல்வி வலயப்பணிப்பாளரால் பாடசாலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இதேவேளை இம்மாணவர்களின் குடும்ப நிலையினை கருத்திற்கொண்டு புலம்பெயர் அமைப்பான புளுஸ் அபிவிருத்தி அமைப்பு (Blues Development Foundation) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் உட்பட புத்தகப்பையும் வழங்கி வைக்கப்பட்டும் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமது அமைப்பால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கிடவும் உறுதியளிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி மக்களும் பாடசாலை சமூகமும் மிகுந்த மகிழ்ச்சியினையும் இந்நிறுவன செயற்பாட்டினையும் வரவேற்றும் உள்ளனர்.
 







மன்னார் வெள்ளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல். Reviewed by Author on January 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.