அண்மைய செய்திகள்

recent
-

டி20 போட்டியில் இலங்கை சாதனை - தொடர் தோல்விக்கு முற்று புள்ளி:


வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வங்கதேசம்-இலங்கை அணிகளுக்கிடையே நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி நிர்ணயித்த 193 ஓட்டங்களை, இலங்கை அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

கடைசியாக விளையாடிய 8 டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி டி20 போட்டியில் இலங்கை அணி சேஸ் செய்யப்பட்ட பெரிய இலக்கு இது என்ற சாதனையையும் படைத்துள்ளது.
மேலும் வங்கதேச மண்ணில் முத்தரப்பு தொடர், டெஸ்ட் தொடர் என இரண்டையும் கைப்பற்றியுள்ள இலங்கை அணி, தற்போது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டியில் இலங்கை சாதனை - தொடர் தோல்விக்கு முற்று புள்ளி: Reviewed by Author on February 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.