அண்மைய செய்திகள்

recent
-

சத்திரசிகிச்சை உபகரணங்களால் விபரீத நோய் பரவும் அபாயம் -


சத்திரசிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீள் பாவனைக்கு உட்படுத்தப்படும்போது தொற்றுநீக்கப்படுவது வழக்கமாகும்.
எனினும் இவ் உபகரணங்களால் அல்ஸைமர் நோய்க்கான புரதங்கள் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கண்டவாறு அல்ஸைமர் நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆயினும் அண்மையில் Cerebral Amyloid Angiopathy (CAA) எனப்படும் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய நோயாளிகள் எட்டு பேரை இனங்கண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தமது இளம் வயதில் மூளைச் சத்திரகிச்சைக்கு உட்படுத்தப்பட்வர்கள் ஆவார்கள்.
குறித்த எட்டு பேரிலும் எவ்விதமான பரம்பரை அலகு மாற்றமும் இடம்பெறவில்லை.

எனவே சத்திரசிகிச்சையின்போது அமிலோயிட் புரதங்கள் கடத்தப்பட்டிருப்பதால் இவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
இதேவேளை University College London (UCL) ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அமிலோயிட் பீட்டா புரதங்கள் கடத்தப்படக்கூடியவை என கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சத்திரசிகிச்சை உபகரணங்களால் விபரீத நோய் பரவும் அபாயம் - Reviewed by Author on February 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.