அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் பிறப்புப் பதிவு இல்லாமல் இலங்கை பிள்ளைகள் இத்தனை ஆயிரம் பேரா?


தமிழகத்தில் இலங்கையர்கள் வசிக்கும் பல்வேறு அகதி முகாம்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பிறப்புகள் பதிவுசெய்யப்படாத நிலையில் குழந்தைகள் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஒரு வார தூதரக சேவை ஒன்றை கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் பெப்பரவரி 2ஆம் திகதிவரை நடத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை பெற்றோருக்கு பிறந்த 1139 குழந்தைகள் இதன்போது பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, கரூர், வேலூர், திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, கூடலூர், ஈரோடு மற்றும் திருப்பூர் முதலான மாவட்டங்களில் உள்ள அகதி முகாம்களில் உள்ள குறித்த சிறுவர்களுக்கு இந்த தூதரக சேவையில் நன்மை கிடைத்ததாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அகதி முகாம்களில வசிக்கும் இலங்கை பெற்றோர்களின் குழந்தைகள் பதிவை ஊக்குவிக்கும் வகையில் இந்த தூதரக சேவை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் 1,029 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். 2017 இல் நடத்தப்பட்ட 52 விசேட தூதுரக சேவையில் 3,520 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலங்கையர்கள் வசிக்கும் அகதி முகாம்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பிறப்புகள் பதிவுசெய்யப்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக தூதரக சேவையை நடாத்துவதன்மூலம் பிறப்பு பதிவை முழுமைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிறப்புப் பதிவு இல்லாமல் இலங்கை பிள்ளைகள் இத்தனை ஆயிரம் பேரா? Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.