அண்மைய செய்திகள்

recent
-

கமல்ஹாசன் வகுக்கும் புதிய அரசியல் வியூகம் -


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய அவர், அரசியலில் எனக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது, தான் வந்ததற்கு பெரிய கோபம் தன் காரணம், முதல்வரானதும் லோக் ஆயுக்தா தான் தனது முதல் கையெழுத்து.
இதுவரை கலையை மட்டும் தந்த நான், இனி கடைமையை செய்ய இருக்கிறேன்.

மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், காலில் விழுவது பொன்னாடை போர்த்துவது போன்ற செயல்கள் மக்கள் நீதிமய்ய மேடையில் இருக்காது.
நாட்டை காப்பாற்றும் கடமை நம்மிடம் வந்துள்ளது, அதனை திறம்பட செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடந்து மாணவர்கள் மத்தியில் உரையாடல் நிகழ்த்திய கமலஹாசன் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது கேள்வி எழுப்பிய மாணவர், 2016 வரை நீட் இல்லை, இது தற்போது தேவையா என கேட்டதற்கு, மத்தியில் இருப்பவர்கள் யாருக்கும் தெளிவு இல்லை, நாம் தான் நாம் கல்வியை தீர்மானிக்க வேண்டும் என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், நோட்டுக்கு ஓட்டு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும், விவசாயத்தை பாதுக்காக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வியில் புரட்சி என எத்தனையோ மாற்றங்களை முன்நிறுத்த வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இவ்வாறு மாணவர்களை குறி வைத்து சமீப காலமாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கமல்ஹாசன் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவது அவரது புதிய அரசியல் வியூகமாகவே கருதப்படுகிறது.
கமல்ஹாசன் வகுக்கும் புதிய அரசியல் வியூகம் - Reviewed by Author on March 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.