அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிரியாவில் நடைபெற்று வரும் இனப்படு கொலையை உடன் நிறுத்த வேண்டுடி கண்டன ஆர்பாட்டம்....படமும் வீடியோவும் இணைப்பு

 சிரியாவில்  நடைபெற்று வரும் மனித குலத்துற்கு எதிரான இனப்படு   கொலையை உடன் நிறுத்த வேண்டுடி  03-03-2018 இன்று காலை -10-00மணியளவில்
மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம் பெற்றது.


           மனிதம் மரணித்து விட்டதா?
சிரியாவில்  நடைபெற்று வரும் மனித குலத்துற்கு எதிரான இனப்படு   கொலையை உடன் நிறுத்த வேண்டும்.  மனித உரிமையை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை வெறும் பார்வையாளர் ஆகிவிட்டதா? இனப்படு கொலையை நிறுத்துவதற்கு இதுவரை எதுவித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்காதது ஏன?; மனித உரிமைகள் ஆணையகம் வெறும் பெயரளவில் தானா இயங்குகிறது எனும் சந்தேகம் சாமானியர்களுக்கே எழுகிறது
இனப்படு கொலையை நிறுத்த வல்லமை இல்லாத ஐக்கிய நாடுகள் சபை படுகொலை எண்ணிக்கையை கணக்கிடுவதுடன் மட்டுப்படுத்திக் கொள்கிறீர்களோ? எனும் சந்தேகம் எழுகிறது உலகத்திற்கே மனச்சாட்சி மரணித்து விட்டதா? இனக்குழுமத்தை பார்க்காமல் அவர்களும் மனிதர்கள் என்று உங்கள் மனவுணர்வை வெளிப்படுத்துங்கள் சதிகார கனவான்களே பர்மா சிரியா என உங்கள் அருகில் நடப்பதை கண்டு கௌளாமல் அமெரிக்க ஏகாதிபதியத்திற்கு அடி பணிந்து அமைதி காக்கும் நீங்களா? முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்கு சர்வதேச விசாரணை  மூலம் நீதி பெற்று தருவீர்கள் என நம்பினால் அதை விட முட்டாள்த்தனம்  வேறொன்றும் இருக்க முடியாது என்றே தோன்றுகின்றது.

பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை பார்வையாளர்களாக அமைதி காப்பது மிகுந்த வேதனை அழளிக்கிறது நாமும் இனப்படு கொலைக்கு உள்ளான இனம் என்பதால் அதன் வேதனையும் வலியும் புரிகிறது  உலகில் மனித உரிமையை பாதுகாக்க தவறும் நீங்கள் எதற்காக வருடத்துக்கு  இரண்டு தடைவை ஒன்று கூடுகிறீர்கள் வெறுமனே அறிக்கையிடும் ஐ.நா சபையாகவே தற்போது காணப்படுகிறது என்பதே வேடிக்கையான உண்மை 

தயவு செய்து சிரிய மக்களை காப்பாற்றுங்கள் ஐ.நா. ஒரு தசாப்தத்தில் முள்ளிவாய்க்கால்ää பர்மா சிரியா என மூன்றாவது தடவையும் தோற்று விட்டதாகவே நாம் கருதுகிறோம் உங்கள் பொறுப்பற்ற செயற்பாட்டையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் சிரிய மக்களுக்கு அமைதி மீளவும் திரும்ப வழிவகுப்பதுடன் உண்மையைக் கண்டறிந்து நியாயம் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.
                             நன்றி 

இவ்வண்ணம்
வி.எஸ்.சிவகரன்.
தலைவர்
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.



















மன்னாரில் சிரியாவில் நடைபெற்று வரும் இனப்படு கொலையை உடன் நிறுத்த வேண்டுடி கண்டன ஆர்பாட்டம்....படமும் வீடியோவும் இணைப்பு Reviewed by Author on March 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.