அண்மைய செய்திகள்

recent
-

எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு வழி கண்டுபிடித்த இந்தியப் பெண் ஆராய்ச்சியாளர். -


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் உலகெங்கும் பலவிதமாக பரவி உள்ள எலெக்ட்ரானிக் சாதனங்களை அவற்றின் உபயோகத்திற்குப் பின் என்ன செய்வது என்று உலகமே கவலைபட்டுக் கொண்டிருந்த நிலையில்,
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியப் பேராசிரியர் வீணா சகஞ்வாலா. இவர் தனது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் எலெக்ட்ரானிக் பொருள்களை மக்களின் உபயோகப் பொருள்களாக மாற்ற முடியும் என்று நிருபித்துள்ளார்.

இதற்கென ஒரு மைக்ரோ தொழிற்சாலையை அமைத்துள்ள இவர் இதன் மூலம் மொபைல் போன் , மடிக்கணினி, போன்ற எலக்ட்ரோனிக் கழிவுகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் வீட்டு உபயோகப் பொருளாக மாற்றி வருகிறார்.
உலகிலேயே எலக்ட்ரானிக் கழிவுகள் மாற்றியமைக்க செயல்படும் முதல் தொழிற்சாலை இவருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு வழி கண்டுபிடித்த இந்தியப் பெண் ஆராய்ச்சியாளர். - Reviewed by Author on April 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.