அண்மைய செய்திகள்

recent
-

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் -


இன்றைய காலத்தில் பெரும்பாலானோரின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் தான்.
இதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுகளே, உணவுகள் சரியாக இருந்தால் எந்த நோயும் அண்டாது.

எங்கும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளைக் கொண்ட சூழலில் வாழ்வதால், நம்மை அறியாமலேயே நாம் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேரிடுகிறது.
இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இருந்தாலும் மனக்கட்டுப்பாடு மற்றும் போதிய உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
  • உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும்.
  • நட்ஸ்களான வால்நட்ஸ், பாதாம் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும் தன்மை கொண்டவை, ஆனால் இந்த நட்ஸ்களை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது தான் உடலுக்கு உகந்தது.
  • மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து உறையும் வாய்ப்பைத் தடுத்து விடுகின்றது.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், ஓட்ஸை அன்றாடம் உட்கொண்டு வருவது நல்லது.
  • தினமும் 2 பல் பூண்டை பச்சையாக காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் - Reviewed by Author on April 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.