அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி? தமிழ் பெண் சாந்தி


அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தன் வகுப்பில் இருந்த மாணவர்களை தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி என்ற ஆசிரியை காப்பாற்றினார்.

அவர் எப்படி காப்பாற்றினார் என்பது குறித்து ஊடகங்களில் செய்தியாக வந்ததே தவிர, அவர் அது குறித்து எதுவும் கூறாமல் இருந்தார்.
இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகத்திற்கு நீண்ட நாட்களுக்கு பின் பேட்டியளித்துள்ளார், நான் பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டது.

நான் குண்டு சத்தம் கேட்டதில்லை என்பதால் ஒன்றும் புரியவில்லை, அதன் பின் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது. அப்போது தான் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்தேன்.
அதன் பின் பள்ளியில் இருக்கும் அபாயம் அலாரமும் அடித்தது. உடனடியாக தான் முதலில் கதவை அடைத்தேன். ஒரு தாய் முதலில் யாரை காப்பாற்ற நினைப்பால் அவளுடைய பிள்ளைகளை தானே, அதே எண்ணம் தான் அங்கு எனக்கு தோன்றியது.
உடனடியாக அவர்களை ஒரு இடத்தில் அழைத்து கீழே படுக்க வைத்தேன். அதன் பின் தொடர்ந்து யாரோ கதவை தட்டிக் கொண்டிருந்தார்கள், நான் திறக்கவில்லை, பொலிசாக இருந்தால், சாவியை பள்ளி நிர்வாகத்திடம் வாங்கி வந்து திறங்கள் என்று கூறினேன்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கதவை திறந்தனர். ஒரு 7 வயது மாணவன் முன் மற்ற மாணவர்கள் எல்லாம் இறந்து கிடப்பதை பார்த்து மிகவும் பயந்து போனான். அதுமட்டுமின்றி தற்போது அவர்கள் பள்ளியில் இங்கு எதுவும் நடந்துவிடுமா அல்லது வெளியில் செல்லும் போது எதுவும் நடந்துவிடுமா என்ற அச்சத்திலே இருக்கின்றனர்.
முதலில் இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை தடை செய்ய வேண்டும். அப்போது தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி? தமிழ் பெண் சாந்தி Reviewed by Author on April 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.