அண்மைய செய்திகள்

recent
-

ஒரே ஓவரில் மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ: பரபரப்பில் முடிந்த முதல் ஐபிஎல் போட்டி -


மும்பை அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி டேவைன் பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை-சென்னை அணிகளுக்கிடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித், லீவிஸ் களமிறங்கினர்.
லீவிஸ் தீபக் சஹார் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதன் பின் வந்த இஷான் கிஷான் நிதான ஆட்டத்த வெளிப்படுத்தினார்.

மற்றொரு முனையின் ஆடி வந்த ரோகித் சர்மா 15 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் உடன் இணைந்து ஓட்டத்தை குவிக்க ஆரம்பித்தார்.
சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வாட்சன் பந்தில் வெளியேறினார். இஷான் கிஷான் 40 ஓட்டங்களிலும் பெளலியன் திரும்ப மும்பை அணி ஒரு கட்டத்தில் 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்தது.

அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டம் குவித்தனர்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹீர், தீபக் சஹார் ஆகியோர் தல ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பின் 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக வாட்சன், அம்பத்தி ராயுடு களமிறங்கினர்.

ஷேன் வாட்சன் 16, அம்பத்தி ராயுடு 22, சுரேஷ் ரெய்னா 4 என வந்த வேகத்தில் வெளியேற சென்னை அணி 8.3 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 51 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கீதர் ஜாதவ் திடீரென்று ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார்.

இதனால் சென்னை அணியின் தோல்வி உறுதி என்று நினைத்த போது, சென்னை அணியின் ஆல் ரவுண்டரான டேவைன் பிராவோ ருத்ரதாண்டவம் ஆடினார்.
குறிப்பாக 18-வது ஓவரில் பிராவோ இரண்டாவது பந்தில் 6, அடுத்த பந்தில் 6, நான்காவது பந்தில் 2 ஓட்டம், நான்காவது பந்தில், ஐந்தாவது பந்தில் சிக்ஸர் என பறக்க விட்டு மும்பை அணிக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தினார்.

அதன் பின் 19-வது ஓவரிலும் 6, 6, 2, 6 என அதிரடி காட்டிய பிராவோ கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
20 ஓவரில் அணியின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவை. அப்போது சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

காயம் காரணமாக வெளியேறியிருந்த கீதர் ஜாதவ் களமிறங்கி சிக்ஸர், பவுண்டரி பறக்கவிட சென்ன அணி 19.5 ஓவரில் 169 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அதன் பின் ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான பிராவோ 30 பந்தில் 68 ஓட்டங்கள் குவித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஓவரில் மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ: பரபரப்பில் முடிந்த முதல் ஐபிஎல் போட்டி - Reviewed by Author on April 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.