அண்மைய செய்திகள்

recent
-

காலா படத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் தரப்பினர்!


"காலா படம் பற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் நையாண்டியும், கிண்டலும் செய்து விமர்சித்துள்ள நிலையில், அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அரசுக்கு ஆதரவாக, ரஜினி கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு, காலா பட வியாபாரம் தான் காரணம் என திமுக பத்திரிகையான முரசொலி பத்திரிகையில் நையாண்டியும், கிண்டலும் செய்து, விமர்சனம் வெளியாகியிருந்தது.
இந்த கோபம் காரணமாக, திமுக தலைவர் கருணாநிதிக்கு, ரஜினி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்ததை, முரசொலியில் பிரசுரிக்கவில்லை.
திமுக மேடைகளில், ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசும்படி, பேச்சாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படத்தை, திமுகவில் உள்ள ரஜினி ரசிகர்களும் பார்த்து ரசித்துள்ளனர். எனவே, காலா வெற்றி, ஸ்டாலின் தரப்பினருக்கு, அதிர்ச்சி அளித்துள்ளதாக, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலா படத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் தரப்பினர்! Reviewed by Author on June 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.