அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மவட்டத்தில் தொடர்ச்சியாக வணவளத்துறையினரால் மக்கள் பாதிப்பு

மன்னார் மவட்டத்தில் அனோகமான பொது மக்களின் காணிகள் விவசாயக் குளங்கள், மேய்ச்சல் நிலங்கள், தனியார் குடிமனைக் காணிகள், அரசால் வழங்கப்பட்ட காணிகள், உறுதிகாணிகளை எல்லாம் வன விலங்குகள், மற்றும் வனவளத்துறை திணைக்களங்;களால்  நாளாந்தம் எல்லையிட்டு மக்களின் வாழ்வாதாரத்திலும் இடையூறு விளைவிப்பதாக ஒவ்வொரு முறையும் மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் பொது மக்களால் ஆதங்கங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ் குறைபாடுகளை பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்து வைக்கும் நோக்குடன் இது சம்பந்தமான அனைவரையும் ஒன்றுக்கூட்டி கலந்துரையாடுவது என கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதற்கமைய மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் நேற்று செவ்வாய் கிழமை (26.06.2018) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் இதன் சம்பந்தமான அமர்வு இடம்பெற்றது.

இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் இணைத் தலைவருமான சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் றிசாட்டின் பிரதிநிதி அமீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் பிரதி நிதி, பிரதேச சபை உறுப்பினர், வன விலங்குகள் மற்றும் வன வளத்துறை திணைக்களங்களின் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகி வரும் பொது மக்களின் கிராமிய பிரதி நிதிகள் என பலரும் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கணைப்புக் குழுக்கூட்டத்தில் பாப்பாமோட்டை, கத்தாளம்பிட்டி பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஓடு பாதை துறைப்பகுதி,

 வனவளத்துறை திணைக்களம் தமது விருப்பின்படி எல்லை கல் இடல் விடயம்,

வன விலங்குகள் மற்றும் வன வளத்துறை திணைக்களங்களின் அதிகாரிகள் அழைக்கும்பட்சத்தில் அப்பகுதிகளிலுள்ள பொது மக்களை அனுகாமல் அளவை மேற்கொள்ளல் தொடர்பாகவும்

யானையினால் இப் பகுதி கிராம மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்து வருவதை சுட்டிக்காட்டி இவற்றை தவிர்க்கு முகமாக யானை வேலி அமைக்க வனவளத்துறை திணைக்களம் அசமந்த போக்காக செயற்படுவது தொடர்பாகவும்

மக்கள் பயண்பாட்டிக்கு விடுவிக்கப்பட்ட காணிகளை வனவளத்துறை திணைக்களம் தடுத்து வரும் விடயம் தொடர்பாகவும் இவ் கூட்டத்தில் ஆராயப்பட்டன.






மன்னார் மவட்டத்தில் தொடர்ச்சியாக வணவளத்துறையினரால் மக்கள் பாதிப்பு Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.