அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணனியில் முகம்....கலைச்செம்மல் சூ.இ.கீதப்பொன்கலன் லியோன்

நம்மைக்காண வருகின்றார் நாட்டுக்கூத்த நெறியாளர் நடிகர் பாடகர் மறையாசிரியர் கலைச்செம்மல் சூ.இ.கீதப்பொன்கலன் லியோன்(HIGஅங்கிள்) அவர்களின் அகத்திலிருந்து
நாட்டுக்கூத்து நாடகங்களின் எழுச்சிக்கு இளைஞர்களின் உற்சாகமும் மூத்தகலைஞர்கள் இணைந்து உருவாக்க வேண்டும்….

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் மன்னார் நகரம் தற்போது பெரியகடைப்பகுதியில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சமூகசேவையிலும் கலையிலும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன். எனது சேவைக்கு என்னுடன் இணைந்து பணியாற்றும் சூ.இ.கீ.லூசியா மரியம்மா எனது மனைவி மற்றும் பிள்ளைகளினையும் பேரப்பிள்ளைகளினையும் நினைவில்…. 

தங்களின் கலைப்பயணத்தின் தொடக்கம் பற்றி-
எனது கலைப்பயணம் எனும் போது எனது தந்தை மனுவேல் சு10சையா லியோhன் சிறந்த மெஜிக்மான் அந்த நேரத்திலே வெளிநாடுகள் பல சென்று கற்று வந்தார் பாடசாலைகளிலும் மெஜிக் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். அத்துடன் ஆங்கில ஆசிரியராகவும் தாய் மேரி அனு டல்மேடா செயலாற்றினர் எனது ஆரம்பக்கல்வியை மன்னார் நல்லாயன் கல்லுரியிலும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றேன் சிறுவலதில் இருந்தே இயல்பாக எனக்கு நாடடுக்கூத்து நடிப்பு வசமானது.
நான்-1934-05-18 பிறப்பில் இருந்து தற்போது வயது-84 கலைச்சேவை-50வருடங்களுக்குமேல் ஆற்றிவருகின்றேன்.

கல்விக்காலம் பற்றி---
நான் சிறுவயதில் சரியான சுட்டிதான் இருந்தும் எனது தந்தை சும்மா விடவில்லை இந்தியா-தலைமன்னார் கப்பல் சேவையின் CUSTAMS-காசளராகவும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தபடியால் எனக்கு இலகுவாக ஆங்கிலம் பேசவரும் அத்தோடு JC வரை(அன்று JC-SSC என்று தான் சொல்வார்கள்) படித்துள்ளேன். அருட்சகோதரர் மெத்தியூஸ் அருட்சகோதரர் ஹில்லறி போன்றவர்களின் வழிநடத்தலில் எனது கல்விக்காலம் சிறப்பாக அமைந்தது.


கலைப்பயணம் பற்றி---
கலைத்துறை-நாடகம் 40நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளேன் நாட்டுக்கூத்து அறிவிப்பு பாடல் இயற்றுதல் பாடுதல் அறிவிப்பாளர் மறைபணியாளர் சமூகசேவையாளர் எனது கலைப்பயணம் தொடர்கின்றது.

நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள்---
பல நாடகங்களில் பெண்வேடம் ஏற்று நடித்துள்ளேன்
அத்துடன் எமதர்மன் தாவீது ஏரோது பிலாத்து பறவாஸ்-பாத்திமேயன்-மருத்துவர்-குருடன்-கோமாளி மீன்விற்பவன் இன்னும் பல பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளேன் எந்தப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். சிலோன் சின்ன ஜெமினிக்கணேசன் என செல்லப்பெயர் கொண்டு அழைத்தார்கள்.

பாடல் இப்போதும் பாடுவீர்களா என்று கேட்டதும்
தனது தோள்பையில் இருந்த கெஞ்சிராவை கையில் எடுத்தவர்.(நாரதர் கையில் வைத்திருப்பது என சொல்லி சிரித்தார்)
"கங்கை அணிந்தவா என தொடங்கும் தில்லையம்பல நடராசா செழுமை நாதனே பரமேசா" பாடலை கம்பீரமான குரலில் பாடிக்காட்டினார் அத்தோடு கிறிஸ்த்தவப்பாடலும் பாடிக்காட்டினார்.
அவரிடம் கெஞ்சிரா-கைத்தாளம் மணி-புல்லாங்குழல்-றபான் சிறிய இசைக்கருவிகள் கைவசம் வைத்துள்ளார்


நீங்கள் நடித்த நாடகங்கள் பற்றி—
40ற்கு மேல் நாடகங்கள் நடித்துள்ளேன் அத்தோடு இயக்கியுள்ளேன் இப்போது நினைவில் உள்ளவை சொல்கின்றேன்
  • அழியாத உறவு-நாடகம்
  • தணியாத தாகம்-1985 நல்லூர் யாழ்ப்பாணம்-மட்டக்களப்பு(பல இடங்களில்)
  • எட்டாத உறவு-நாடகம்
  • வளர்மதி-நாடகம்
  • சிதைந்தசிலைகள்-நாடகம்
  • காசா-லேசா-நாடகம்
  • வேதசாட்சிகள்-நாடகம்
  • எமகண்டம்-நாடகம்
  • சங்கிலியன்-நாடகம்
  • ஆதவனே மன்னிப்பாய்-நாடகம்
  • ஒரேஇரத்தம்-நாடகம்
  • பணமா-பாசமா-நாடகம்
  • ஞானசவுந்தரி நாடகம் சரித்திர நாடகங்கள் சமூகநாடகங்கள் ஓரங்க நாடகங்கள் பலவற்றில் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளேன்.

சினிமா படங்களில் ஏதும் நடித்துள்ளீர்களா----
ஆம் நல்ல கேள்வி நான் சினிமாப்படங்களில் நடித்துள்ளேன் ஆனால் எனது அதிஸ்ரமின்மையும் போர்க்கால சூழலும் சந்தர்ப்பங்களை தரவில்லை மாதா கோவில் மணியோசை தமிழ் சினிமா படத்திலும்
கண்டியில் ஒரு படத்திலும்  ஒப நத்திம் நம்(நீ இல்லாது போனால்)02 சிங்கள சினிமா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி PHOTOES SHOOT முடிந்தும் சிலரின் முரண்பாடு காரணமாகவும் பயத்திலும் சந்தர்ப்பங்களை தவறவிட்டேன் அது தற்போதும் கவலையான விடையம் தான்.

உங்களோடு பெண் வேடமேற்று நடித்தவர்கள் பற்றி---
அக்காலத்தில் பெரிதாக பெண்கள் நடிப்பதில்லை அதனால் பொருத்தமான ஆண்கள் பெண் வேடமேற்று நடிப்போம் அந்தவகையில் என்னோடு நடித்தவர்கள் பலர் உள்ளனர் டோமினிக் மாஸ்டர் ஜனாப் ஜபார் கான் துணை நடிகராக நடராசா இராசநாயகம் ஜேமிஸ் இன்னும் பலர் நடித்துள்ளார்கள்

அந்த காலத்தில் கலைமன்றங்கள் இருந்ததா…
ஆம் பல இருந்தது கலாலயா மன்றம் மூலம் பல நாடகங்கள் போட்டிருக்கின்றோம் பெற்றாவில் இயங்கி கொண்டிருந்த மெல்லிசை மன்றத்திலும் நான் உறுப்பினராக இருந்தேன் அத்தோடு பல கலை மன்றங்களில் நான் நாடகங்கள் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளேன் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது.

மறக்க முடியாத கலை நிகழ்வுகள் பற்றி…
50வருட கலைப்பயணத்தில் பலவுள்ளது அதிலும் சமயங்கள் கடந்து பௌர்ணமி கலை விழா முற்ற வெளியிலும் மன்.அல் அஷ்ஹர் பாடசாலையின் மைதானத்தில்(அன்றைய காலத்தில் சின்ன அரங்கு இருந்தது)நான் மக்கள் காதர் கலைவாதீ கலீல் நாவண்ணன் இன்னும் பலர் இணைந்து மிகவும் சிறப்பாக நிகழ்ச்சிகள் செய்வோம் அது பசுமையான காலம்.
எழுதுகோள் எனும் சஞ்சிகையும் செய்தோம்.

தங்களின் வேலை பற்றி
எனது வேலையும் எனது துறையோடு தொடர்பு பட்டதாகவே அமைந்தது அன்று பிரபல்யமாக இருந்த குமரன் திரையரங்கின் இயந்திரப்பகுதி இயக்குனராக இருந்தேன் திரையரங்கின் அனைத்து வேலைகளையும் செய்வேன் அத்துடன் சிறிது காலம் உதவி முகாமையாளராகவும் இருந்தேன் பின்பு வாழ்வுதயத்திலும் களப்பணி தொண்டனாகப்பணிபுரிந்தேன் தற்போது முழுமையான மறைபணியாளனாக மறைக்கல்வி ஆசிரியராக இருக்கின்றேன்.
 
தங்களின் வளர்ச்சியில் அக்கறையோடு செயலாற்றியவர்கள் பற்றி---
50வருட கலைப்பயணத்தில் பெரிதும் என்னை உற்சாகப்படுத்தியவர் திருமறை கலாமன்ற இயக்குனர் மரியசேவியர் அடிகளாரும் முதல் PASSION PLAY-திருப்பாடுகளின் காட்சியிலும் அத்தோடு அருட்தந்தை ஜேசவாஸ் அவர்களின் நெயறியாள்கையில்  புனித ஜேசவாஸ் நாமம் நாடகத்திலும் நடித்தேன் அத்துடன் என்னுடன் தொடர் பயணம் வந்தவர்கள் இங்கே ஏராளம் சிலரை தான் என்னால் ஞாபகப்படுத்த முடிகின்றது
  • திரு.கரவைக்கிழார் கந்தசாமி
  • திரு.தியாகராசா
  • திரு.புலவர் செல்வதுரை
  • திரு.மாட்டீன் மாஸ்ரர்
  • டொக்டர் பவிலத்துன்
  • கப்டன் கந்தையா
  • திரு.நாவண்ணன்
  • ஜனாப் மக்கள் காதர்
  • ஜனாப் கலைவாதீ கலீல்
  • ஜனாப் ஜபார் கான்
  • திரு.விமல் மாஸ்ரர்
  • திரு.இராமலிங்கன்
  • திரு.ஜேமிஸ்
  • திரு.புஸ்பராசா
  • திரு.ஞானப்பிரகாசம்
  • திரு.அருமை
  • திரு.மதிவதனன்(விலை கட்டுப்பாட்டு அதிகாரி)
  • திரு.ஜீவா மாஸ்ரர்
  • திரு.எல்விஸ் மாஸ்ரர்
  • அருட்சகோதரர் விஜயா
  • அருட்தந்தை மரிய சேவியர்
  • அருட்தந்தை யோசவாஸ்
  • அருட்தந்தை பலஸ்
  • அருட்தந்தை இருதயதாஸ்
  • அருட்தந்தை மரிய செல்வம்
  • அருட்தந்தை ஜெரோம் லெம்பேட்
  • அருட்தந்தை பிலிப்ஸ்
  • அருட்தந்தை தமிழ்நேசன்
  • அருட்தந்தை எமில் இன்னும் பலர் உள்ளார்கள் எனது ஞாபகமின்மையும் முதுமையும் காரணமாக பெயர்குறிப்பிடாதவர்கள் என்னை மன்னிக்கவும்

நாடகங்களின் மூலம் அடைந்த பயன் என்றால்---
ஆம் அடைந்த பயன் என்பதை விட எமது ஆற்றல் திறமைகளை வெளிக்கொணர்ந்தோம் அத்தோடு மக்களை மகிழ்வித்தோம்.
  • மன்னார் பொதுவைத்திய சாலை கட்டிட நிதிக்காக நாடகம் போட்டோம்.
  • மன்னார் திருக்கேதீஸ்வரக்கோவில் கட்டிட நிதிக்காக நாடகம் போட்டோம்.
  • புனித செபஸ்தியார் கோவில் கட்டிட நிதிக்காக நாடகம் போட்டோம்.
  • பிள்ளையார் ஆலய கட்டிட நிதிக்காக நாடகம் போட்டோம்.
  • மன்.புனித  சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வளர்ச்சி நிதிக்காக ஞானசவுந்தரி நாடகம் நடித்தோம் இப்படியாக எமது நாடகங்கள் மக்களை மகிழ்விக்கவும் விழிப்புணர்வு பெறவும் திருந்தவும் அதே நேரத்தில் மன்னாரின் வளர்ச்சிக்காகவும் பெருதும் துணைநின்றோம். அந்த நேரத்தில் எங்களது புகைப்படம் பொதுவைத்தியசாலையில் வைத்திருந்தார்கள் நிதி சேகரித்து கொடுத்தமைக்கு பாராட்டுவதற்காக வைத்திருந்தார்கள் அன்று.

தற்கால இளைஞர்யுவதிகளுக்கு தங்களின் அனுபவத்திலிருந்து---

தற்காலத்தில் யாவருக்கும் தேவையானது 03விடையங்கள் அவசியம் பொறுமை-அன்பு-நம்பிக்கை இம்மூன்றும் வாழ்க்ககையில் அவசியம் இருக்கனும் எந்த செயலும் நாம் செய்யும் போது பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் செயலாற்றவேண்டும் அத்துடன் அனைவரிடமும் அன்பாக இருத்தல் மிகஅவசியம் உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி என்று இயேசுகிறிஸ்த்து மொழிந்த திருவாக்கை வாழ்வாக கொள்வோம்.

தாங்கள் பெற்ற விருதுகள் பட்டங்கள் பற்றி….
நான் பெரிதாக விருதுகளும் பட்டங்களும் வாங்கவில்லை காரணம் நான் அதை பெரிதாக விரும்பவும் இல்லை கலைவளர்ப்பது எனது கடமை என்று நினைத்தேன் அத்தோடு அந்தக்காலத்தில் தற்போது விருதுகள் பட்டங்கள் கொடுத்து பெரிதாக கௌரவிப்பதில்லை ஆனால் பொன்னாடையும் பொற்கிளியும் கொடுப்பார்கள் அதுவே அந்தக்காலத்தில் பெரிய கௌரவம் தான் அப்படியான கௌரவங்களை நான் பல முறை மேடைகளில் பெற்றுள்ளேன். அப்படி இருந்தும் எனக்கு
  • 2010-நினைவுச்சின்னம்-தமிழ்செம்மொழி விழா-தமிழ்ச்சங்கம்-மன்னார்
  • 2018-07-01- மறைபணியாளர் நினைவுச்சின்னம்-புனித செபஸ்தியார் பேராலயம் மன்னார்
  • 2018-07-12-கலைச்செம்மல் விருது பிரதேச செயலகம்-மன்னார் இவற்றுடன் பல வாழ்த்துப்பாக்கள் நினைவுச்சின்னங்கள் இருந்தாலும் தற்போது கைவசம் இல்லை.

  • மன்னார் கலைஞர்களின் அடையாளமாக விளங்கும் நியூமன்னார் இணையம்பற்றி---
    அருமையான சேவை என்னை இன்றோடு எத்தனை நாள் வந்து சந்தித்து இந்த நேர்காணலை எடுத்தீர்கள் என்பதை பார்க்கும் போது கலைஞர்களுக்கு மன்னாரில் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தளம் என்றால் நியூமன்னார் இணையத்தினை பயமின்றி சொல்லலாம் உங்களுக்கும் உங்கள் இணையநிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உங்களின் சேவை மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றேன்.

    சந்திப்பு-வை.கஜேந்திரன்-
 














































































































V.KAJENTHIRAN-
கலைஞனின் அகம் கணனியில் முகம்....கலைச்செம்மல் சூ.இ.கீதப்பொன்கலன் லியோன் Reviewed by Author on July 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.