அண்மைய செய்திகள்

recent
-

இனி பச்சை மிளகாயை சாப்பிடாமல் இருக்க .....


உணவிற்கு கார சுவையைத் தரும் பச்சை மிளகாயில், பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணநலன்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
பச்சை மிளகாய் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்பட்டாலும், அனைவரும் வெறுக்கும் பொருளாகத்தான் உள்ளது. ஆனால், இதில் நிறைந்துள்ள எண்ணற்ற மருத்துவ பயன்கள் குறித்து இங்கு காண்போம்.
ஊட்டச்சத்துகள்
பச்சை மிளகாயில் வைட்டமின் A, C, B6 மற்றும் இரும்புச்சத்து, காப்பர், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன், கார்போஹைட்ரேட்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
மேலும் இதில் பைட்டோ நியூட்ரிஷனான கரோட்டீன் - பீட்டா, கரோட்டீன் - ஆல்பா, க்ரோடோஸனின் - பீட்டா மற்றும் லுடீன் - ஜியோக்ஸனின் போன்றவையும் உள்ளதால், இது சருமத்திற்கும், உடலுக்கும் சிறந்தது.
அத்துடன், பச்சை மிளகாயை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான உடல் நலனை பெறலாம்.
இதய நோய்கள்
பச்சை மிளகாயானது இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் வல்லவை உடையது. இது ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை, பைபிரினோலைடிக் செயல்கள் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்கவும் செய்கிறது.

சளி மற்றும் சைனஸ் பிரச்சனை
பச்சை மிளகாயில் உள்ள காப்சைனின், சளி சவ்வுகளில் ஒரு சிறந்த விளைவை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சளி எளிதாக இளக்கி வெளியேறும். அத்துடன் ஜலதோஷம் மற்றும் சைனஸ் பிரச்சனை ஏற்படாமலும் இது தடுக்கிறது.
கண்பார்வை
பச்சை மிளகாய் நமது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதுடன், கண் பார்வையையும் கூர்மையடையச் செய்கிறது. பச்சை மிளகாயானது சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

காயங்கள்
பச்சை மிளகாயை அப்படியே சாப்பிட்டால், உடலில் உள்ள காயங்கள் மற்றும் புண்கள் விரைவில் ஆறிவிடும். இதிலுள்ள விட்டமின் C வெட்டுக் காயங்கள் முதல் அனைத்து வகை காயங்களையும் குணப்படுத்தும்.

அழற்சி
வைட்டமின் C சத்து பச்சை மிளகாயில் அதிகளவு உள்ளதால், இதனை சாப்பிட்டால் அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு உடலில் இருக்கும் நாள்பட்ட அழற்சியை போக்கும். உள்ளுறுப்புகளின் அழற்சி மற்றும் சரும அழற்சி இரண்டையும் பச்சை மிளகாய் சரி செய்யும்.
உடல் வெப்பநிலை குறைப்பு
பச்சை மிளகாயில் உடல் சூட்டினை தணிக்கும் குளிர்ச்சி பண்பு உள்ளது. இதில் உள்ள கேப்சாய்சின் மூளையில் உள்ள ஹைப்போ தலாமஸை தூண்டி உடல் வெப்ப நிலையை குறைக்கிறது.
கோடைக்காலத்தில் இதனை அதிகளவு எடுத்துக் கொண்டால், உடலில் வியர்வை அதிகரித்து குளிர்ச்சியடையும். பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடுவதன் மூலம் ரத்த கட்டுதல் சரியாகும். மேலும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

வயதான தோற்றம்
பச்சை மிளகாய் தசை சுருக்கத்தை போக்க உதவும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு சக்தியானது, சரும பிரச்சனைகளை சரி செய்து வயதான தோற்றத்தை தடுக்கும்.
மனநிலை
பச்சை மிளகாயில் உள்ள எண்டோர்பின், மன நிலையை காத்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் மன அழுத்தம் வெகுவாக குறையும்.

புரோஸ்டேட் புற்றுநோய்
ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை பச்சை மிளகாய் தடுக்கிறது. மேலும் விதைப்பை வீக்கத்திற்கும் சிறந்த நிவாரணியாக பச்சை மிளகாய் பயன்படுகிறது.
இனி பச்சை மிளகாயை சாப்பிடாமல் இருக்க ..... Reviewed by Author on July 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.