அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கனில் கடத்தப்பட்ட சிறுவன் பொலிஸாரின் அதிரடி செயற்பாட்டினால் உடன் மீட்பு-


மன்­னார் முருங்­க­னில் ஆலய வழி­பாட்­டுக்கு நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை   பெற்றோ­ரு­டன் சென்ற 2 வய­துச் சிறு­வன் கடத்­தப்­பட்டு சுமார் 4 மணி நேரத்­தில் குறித்த சிறுவன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,

 முருங்கன் பகுதியில் உள்ள ஆல­யத்­துக்­குப் பெற்­றோ­ரு­டன் 2 வயதுடைய சிறு­வன் நேற்­று (29)  மதியம்  1 மணி­ய­ள­வில் சென்­றுள்­ளார்.

 சிறிது நேரத்­தின் பின்­னர் சிறு­வ­னை ஆலய பகுதியினுள்  காணாத நிலையில் பெற்­றோர் தேடி­யுள்­ள­னர். எனினும் சிறுவனை அங்கே காணவில்லை.

உடனடியாக பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததோடு,சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

-இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

-இந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த ஆலயத்திற்கு வந்த திருக்­கோ­வி­லைச் சேர்ந்­த­வர், வழி­பாடு முடி­வ­டை­வ­தற்கு முன்  ஆலயத்தில் இருந்து வெளி­யே­ சென்றதை பொலிஸார் விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்டுள்ளனர்.

 உடனடியாக திருக்­கோ­வில் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. வவு­னி­யா பொலி­ஸார் மற்­றும் மன்­னார் மாவட்­டத்­தின் ஏனைய பொலிஸ் பிரி­வு­க­ளும் தகவல் வழங்கப்பட்டது.

 இதன் போது குறித்த நபர் வவு­னியா பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து மன்­னார் நோக்­கிச் செல்­லும் பேருந்­தில் சந்­தே­க­ ந­பர் சிறு­வ­னு­டன் ஏறி­யதை வவுனியா பொலி­ஸார் அவ­தா­னித்­த­னர்.

உடனடியாக செயல் பட்ட பொலிஸார் சந்­தே­க­ந­ப­ரைப்  மடக்­கிப் பிடித்­துக் கைது செய்­த­தோடு குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.

 மீட்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை (30) பெற்­றோ­ரி­டம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டார். சிறு­வ­னைக் கடத்­தி­ய­மைக்­கான கார­ணம்  இது வரை வெளியாகவில்லை.

பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் முருங்கனில் கடத்தப்பட்ட சிறுவன் பொலிஸாரின் அதிரடி செயற்பாட்டினால் உடன் மீட்பு- Reviewed by Author on July 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.