அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் சமாதானபேரணியும் கண்காட்சியும்



கறிற்ராஸ்-இலங்கை
SEDEC இன் 50 வது ஆண்டுநிறைவு பொன்விழாவினைமுன்னிட்டு கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் சமாதானபேரணியும் கண்காட்சி நிகழ்வும் முருங்கனில் மிகவும் சிறப்பானமுறையில்  நடைபெற்றுள்ளது. இன்நிகழ்வானது இன்றுகாலை 9.00 மணியளவில் முருங்கன் பஸ்தரிப்புநிலையத்தில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வுகளைகறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தைளு. அன்ரன் அடிகளார் மிகவும் சிறப்பாகதிட்டமிட்டுநெறிப்படுத்தியதோடுää இன்நிகழ்வுக்குதலைமைதாங்கி இவ்மாபெரும் சமாதானபேரணியினைமுருங்கன் பஸ் நிலையத்திலிருந்துஆரம்பித்துவைத்தாh.;

இப் பேரணியின் தொடக்கத்தில் சர்வமத வழிபாடுகள் சர்வமததலைவர்களால் நடாத்தப்பட்டதுடன்  முருங்கன்   பஸ்தரிப்புநிலையத்திற்குஅருகாமையில்ääசமாதானம் நல்லிணக்கத்திற்கு அடையாளமாகபொறிக்கப்பட்டசமாதானநினைவுப்பலகையினை இன்நிகழ்வின் பிரதமஅதிதியாககலந்துகொண்டமன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணியுவிக்ரர் சோசைஅடிகளார் அவர்களும்
மன்னார் அரசாங்கஅதிபர் திருC.J.மோகன்ராஸ் அவர்களும் திரைநீக்கம் செய்துவைத்தார்கள்.பின்னர் பேரணிபஸ்தரிப்புநிலையத்திலிருந்து முருங்கன் மகாவித்தியாலயவளாகத்தைசென்றடைந்தது. அங்குஅழைக்கப்பட்டவிருந்தினர்கள் மாலைஅணிவிக்கப்பட்டு தமிழ் பாரம்பரிய இன்னியவாத்தியத்துடனும் சிங்களபாரம்பரிய கண்டிநடனஅணிவகுப்புடனும் பாடசாலைவளாக அரங்கிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பிரதமஅதிதி அவர்களும் கறிற்ராஸ்-இலங்கைதேசியநிலையத்தின் நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் அருட்சகோதரிது சாறிஅவர்களும் இணைந்து மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட சமாதானதீபத்தினை ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி Sஅன்ரன் அடிகளாரினால் வரவேற்பு உரைநிகழ்த்தப்பட்டதுடன் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றன.

இன்நிகழ்வில் அனுராதபரம் மறைமாவட்டகறிற்ராஸ்-செத்சவிய ஸ்தாபனமும் இணைந்துகொண்டதுடன்ää இதில் 1200 ற்கும் மேற்பட்டமக்கள் கலந்துசிறப்பித்தார்கள். அனுராதபுரத்திலிருந்து 300 ற்கும் மேற்பட்டமக்கள் இதில் கலந்துகொண்டதும் இங்குகுறிப்பிடத்தக்கவிடயமாகும். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகமன்னார் மறைமாவட்டகுருமுதல்வர் அருட்பணியு .விக்ரர் சோசைஅடிகளார் அவர்களும்

கௌரவவிருந்தினராக மன்னார் மாவட்டஅரசாங்கஅதிபர் திரு. C.J.மோகன்ராஸ்அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக மும்மததலைவர்கள் பிரதேசசெயலாளர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் பங்குத்தந்தையர்கள் அரசஅரசசார்பற்ற நிறுவனபிரதிநிதிகள் சமூகமட்டஅமைப்புதலைவர்கள் இலக்கு கிராமபயனாளிகள் முன்பள்ளி ஆசிரியர்கள் பாடசாலைமாணவர்கள் போன்றோர் கலந்துசிறப்பித்தார்கள்.

இதில் பிரதமஅதிதியாககலந்துகொண்டு உரைநிகழ்த்திய மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணியு .விக்கரர் சோசைஅடிகளார் கூறுகையில் கறிற்ராஸ் அமைப்பு இலங்கையில்  பல்வேறுபட்டமனிதநேயப்பணிகளை இலங்கைபூராக இனääமதவேறுபாடுகளைகடந்துபணியாற்றிமக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளதையாவரும் அறிவீர்கள்.கடந்தகாலத்தில் குறிப்பாகமன்னார் மறைமாவட்டத்தில் அரும்பணியாற்றிய ஓய்வுநிலைஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை இவ்வாழ்வுதயஅமைப்பினை ஓர்  அர்த்தமுள்ளவகையில்  செயற்படுத்துவதற்கு அரும்பாடுபட்டவர்.அவர்களுக்கு நாம்  இந்நேரத்தில் நன்றிகளைதெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

 எனவும் கூறினார் மேலும் அவர்தமது உரையில்  இவ் மனிதநேயஅமைப்பிற்குமறைமாவட்டஆயர் அவர்களினால் மறைமாவட்டகுருக்கள் இதன் இயக்குனர்களாகவிருந்து பணியாற்றுவதற்கு அழைக்கப்படுகின்றார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக இதனை வழிநடத்துவதாலேயே இவ் கறிற்ராஸ் வாழ்வுதய நிறுவனம் இவ்வாறு பரினாமவளர்ச்சியைகண்டுள்ளது எனவும் கூறியதோடு இலங்கையில் கறிற்ராஸ் முன்னெடுக்கும் சமாதான முயற்சிகளுக்குவித்திடுபவர் எம்நாட்டில் அனைவரினதும் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த எமது முன்னைநாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்தான் என்பதை  இந்நேரத்தில் தெரிவிப்பதில் மட்டற்ற பெருமையடைகின்றேன் எனவும் இந்நிகழ்விற்கு அனுராதபுரம் மறைமாவட்டமும் இணைந்து இச்செயற்பாட்டைமுன்னெடுத்தமை எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவதோடு தொடர்ந்து இவ் கற்றிற்ராஸ் அமைப்பானது தங்களது பணியில் ஆர்வமுடன் செயற்படுமாறும் வேண்டி இவ் அருமையான நிகழ்வினைமிகவும் சிறப்பாகதிட்டமிட்டு நெறிப்படுத்திய கறிற்ராஸ்-வாழ்வதய இயக்குனர் அருட்பணி
S.அன்ரன் அடிகளாருக்கு தமது விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து தமது உரையினை நிறைவுசெய்தார்.

இன்நிகழ்வில் அனுராதபரம் மறைமாவட்டகறிற்ராஸ்-செத்சவியஅமைப்பின் இயக்குனர் அருட்பணிபெனற் அடிகளார் அவர்கள் தமது உரையில் குறிபிடுகையில்  நாம் சமாதானத்திற்காகஅரும்பாடுபட்டுஉழைக்கின்றோம். இதுநல்லமுயற்சிதான் இருப்பினும் எமது நாட்டில் இன்னும் இச்சமாதானமுயற்சிகள் மேலும் பலன் தரவேண்டுமென்றால்  நாம் நீண்டநாட்களாக  குறிப்பாகவடக்கில் தமதுபிள்ளைகளைபறிகொடுத்தவர்கள் கணவன்மாரைபறிகொடுத்தவர்கள் 500 நாட்களையும்கடந்துபோராடும் அவர்களதுகோரிக்கைகளை எம்நாட்டுத்தலைமை ஒருகணம் பார்க்கவேண்டும். குறிப்பாககேப்பாபுலவு மக்களின் காணிகள் முற்றுமுழுதாக இன்னமும் விடுவிக்கப்படவில்லை.இவ் கேப்பாபுலவுபோல் இன்னும் பலபிரதேசங்கள் முழுமையாகவிடுவிக்கப்படாமல் உள்ளன. இவ்வாறாகமக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுமனிதநேயம் சமமாகபேணப்படும்போதுதான் எமதுநாட்டில் இனங்களுக்கிடையில் உண்மைஅன்பும் சமாதானமும் ஊற்றெடுக்கும் எனவும் கூறி நாம் அனைவரும் இவ்வாறானமக்களின் கோரிக்கைகளுக்காகவும் ஒருமித்துகுரல் கொடுப்பதற்கு விசேடமாகதென்பகுதிமக்களும் இணைந்துகுரல் கொடுக்கவேண்டுமெனவும் கூறிதமதுஉரையினைநிறைவுசெய்தார்.

தொடந்துமுருங்கன் பௌத்தமதபீடாதிபதிஅவர்கள் தமதுஉரையில் கூறுகையில் கறிற்ராஸ்- அமைப்பானதுகத்தோலிக்கநிறுவனமாக இருந்தாலும் இலங்கையில் உள்ளமக்களுக்கு இன-மத வேறுபாடுகளை கடந்து சிறப்பானபணியாற்றிவருகின்றமையைதாம் நன்கு அறிவதாகவும் கடந்தகாலங்களில் இவ் அமைப்புஆற்றிய மனிதநேயப்பணிகள் சொல்லில் அடங்காதவை.இன்னும் விசேடமாக கூறப்போனால்

 மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள குருக்கள் தங்களை முழுமையாக அர்பணித்துபணியாற்றுபவர்கள் என்பதைதாம் நன்குஅறிந்துள்ளதாகவும்-மக்களின் துன்பமானவேளைகளில் உடனடியாககுரல்கொடுப்பவர்கள் மன்னார் மறைமாவட்டஆயர் அவர்களும் குருக்களும்தான் என்பதைதாம் இன்னேரத்தில் தெரிவித்துகொள்வதாகவும் கூறினார்.
எனவே இக்குருக்களின் பணிசிறக்கதாம் ஆசிப்பதோடுகறிற்ராஸ்- மேலும் தமதுபணியினைமக்களுக்குஆற்றவேண்டுமெனவும் கூறிஆயர் மற்றும் குருக்களுக்குதமதுநன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துஉரையினைநிறைவுசெய்தார்.

இன்நிகழ்வில் இந்துமதகுருக்கள் அவர்களும் இஸ்லாம் மதமௌலவிஅவர்களும் தொடர்ந்துஉரை நிகழ்த்தினார்கள். பின்னர் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடையாளமாகவானில் பிரமாண்டமானபலூன் பறக்கவிடப்பட்டதுடன்-அனுராதபுரம் மறைமாவட்ட இளைஞர் குழுவின் நடனநிகழ்வும் இடம்பெற்றதைதொடர்ந்து-கறிற்ராஸ் பணிகளைசித்தரிக்கும் கண்காட்ச்சியினைவிருந்தினர்கள் வைபவரீதியாகதிறந்துவைத்தனர்.

இக்கண்காட்சியினைமக்கள் பார்த்துமகிழ்ந்ததோடு கறிற்ராஸ்-வாழ்வதயத்தின் பணிகளைபாராட்டியும் சென்றனர்.இறுதியில் அனுராதபுரம் மறைமாவட்டகறிற்ராஸ் குடும்ப உறுப்பினர்களுக்கும் மன்னார் மறைமாவட்டகறிற்ராஸ் குடும்ப உறுப்பினர்களுக்கும் வடுக்களைதல் நிகழ்வும் இடம்பெற்றதோடு 2.30 மணியளவில் அனைத்துநிகழ்வுகளும் முடிவுபெற்றது.




















மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் சமாதானபேரணியும் கண்காட்சியும் Reviewed by Author on July 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.