அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழி அகழ்வு 54 தடவையாக.......

மன்னார் சதோச வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்றுடன் 54 வது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது

கடந்த 10 திகதி வெள்ளிகிழமை தொடக்கம் கடந்த 19 ஞாயிற்று கிழமை வரை குறித்த வளாகத்தின் அகழ்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றும் இன்றும் வளமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும்  தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது 

இதுவரை குறித்த வளாகத்தில் 72 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 66 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 440 பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதி மன்ற  பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த வளாகத்தில் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எச்சங்கள் மற்றும் புதிதாக இணம்காணப்படுகின்ற தடய பொருட்கள் சம்மந்தமாக எனிவரும் நாட்களில் தகவல் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் எனி வரும் நாட்களில் ஊடகவியளார்கள் மனித புதைகுழிக்கு வருகை தந்து புகைபடம் மற்றும் ஓளிப்பதிவுகளை மோற்கொள்ளலாம் எனவும் ஆனால் தகவல் வழங்கும் விடயங்கள் பற்றி எதுவும் கூற முடியாத நிலை காணப்படுவதாகவும் விசேட சட்டவைத்திய நிபுணர் தொரிவித்துள்ளார்

எனவே நேற்றைய மற்றும் இன்றைய அகழ்வு பணிகள் தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்குவது சிரமமாக காணப்படுவதாக ஊடகவியளாலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.




மன்னார் மனித புதைகுழி அகழ்வு 54 தடவையாக....... Reviewed by Author on August 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.