அண்மைய செய்திகள்

recent
-

உலகின் அதிவேக மனிதன்: ஆனால் கால்பந்து விளையாட்டில் திணறல்


உலகின் அதிவேக மனிதனாக கருதப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், கால்பந்தாட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவதாக தெரிவித்துள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த ஒலிம்பிக் நாயகன் உசைன் போல்ட்(32), ஓய்வு பெற்றதில் இருந்து தற்போது கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியன் ஆவார். இவருக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். இதனை அறிந்த அவுஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணி, உசைன் போல்ட்டிற்கு வாய்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, கால்பந்து போட்டிக்காக உடற்தகுதியை மேம்படுத்த உசைன் போல்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உசைன் போல்ட் பந்துகளை பாஸ் செய்வது சரியாக இருந்தாலும், அவரால் எதிர்பார்ப்புக்கு இணங்க ஓட முடியவில்லை.
கால்பந்தாட்டத்திற்கான உடற்தகுதி இல்லாததால் விரைவாகவே அவர் களைப்படைந்து ஓய்வுக்கு சென்று விடுகிறார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை உசைன் போல்ட்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பெரிய சவால் என்னவெனில் நின்று பிறகு செல்ல வேண்டும். பிறகு நிற்க வேண்டும் என்ற முறை எனக்கு போராட்டமாக இருக்கிறது. ஸ்பீட் பிக் செய்ய வேண்டும், பிறகு குறைக்க வேண்டும்.
பிறகு மீண்டும் ஸ்பீட் எடுக்க வேண்டும் என்பது எனக்கு பழக்கமில்லாத ஒன்று. ஆனாலும் எல்லாமே பயிற்சிதான். இதற்கு நான் தயாராகிவிட்டேன். இப்போது வழிமுறைகளைக் கற்று விட்டேன். இனி இப்படியே மேம்படுத்த வேண்டியதுதான்’ என தெரிவித்துள்ளார்.

கிளப் பயிற்சியாளர் மைக் முல்வி கூறுகையில், ‘அவர் நன்றாக ஆடுகிறார். ஆனால், நாங்கள் அவரைச் செய்ய சொல்லும் விடயங்களை அவர் கடந்த சில ஆண்டுகளாக செய்ததில்லை என்பதுதான். அத்லெட்டிக் போட்டிகளுக்கிடையே கால்பந்து ஆடியிருக்கிறார்.
அவருக்கு ஒரு அடிப்படையான கால்பந்து திறமை உள்ளது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால், கால்பந்தாட்டத்திற்கு உரிய வேகத்தில் ஆட வேண்டும். இதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்’ என தெரிவித்துள்ளார்.


AFP
AFP

உலகின் அதிவேக மனிதன்: ஆனால் கால்பந்து விளையாட்டில் திணறல் Reviewed by Author on August 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.