அண்மைய செய்திகள்

recent
-

மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் -


நம்முடைய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்ற காரணத்தினால் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் தாக்குதலை சந்திக்க நேரிடுகிறது.

இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. இந்த கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து மாரடைப்பு ஏற்படுகின்றது.

மாரடைப்பின் முக்கிய காரணங்கள்
  • உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ரத்தக் குழாய்கள் வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படும். இதனால், ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படும்.
  • உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும். சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேரும்போது, கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு வரலாம்.
  • கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் மெள்ளமெள்ள படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும்.
  • சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும்.
  • கையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் மெள்ள மெள்ள நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைத்து மாரடைப்பு ஏற்படுத்தும்.
மாரடைப்பை தடுக்கும் உணவு முறைகள்
  • அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதற்காக இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றைஅடிக்கடி சாப்பிட வேண்டும். அதோடு பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகிய உணவுகளும் உடலின் வளர்ச்சிக்கு தேவையானது.
  • நல்ல கொழுப்பை கொடுக்கும் தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மீன், நண்டு, இறால், கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கான சத்துக்களை பெறலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் - Reviewed by Author on August 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.