அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலையில் உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்துவைப்பு-(படம்)

ஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியம் மற்று ஐக்கிய இராட்சியம் ஆர்.ஆர். அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 'உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம்' இன்று புதன் கிழமை(8) காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இயக்குனர் வைத்திய கலாநிதி கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நிலையத்தை திறந்து வைத்தார்.

-ஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியம் மற்று ஐக்கிய இராட்சியம் ஆர்.ஆர். அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 2.8 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு உபகரண தொகுதிகள் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் வைபவ ரீதியாக குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

-குறித்த உடற்பயிற்சி நிலையத்தின் ஊடாக இதயம் சார்ந்த நோய்களை கண்டறிந்து கொள்ள முடியும்.

குறித்த நிகழ்வில்  ஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியத்தின் பிரதி நிதி மைக்கல் சுப்பிரமணியம்,சர்வமத தலைவர்கள், வைத்தியர்கள்,விசேட வைத்திய நிபுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சினால் சகல வசதிகளையும் கொண்ட அம்புலான்ஸ் வண்டி ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

குறித்த அம்புலான்ஸ் வண்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இயக்குனர் கில்றோய் பீரிஸ் அவர்களிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 









மன்னார் பொது வைத்தியசாலையில் உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்துவைப்பு-(படம்) Reviewed by Author on August 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.