அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு-(படம்)

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் இன்று திங்கட்கிழமை(29) வரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழைவாயில் பகுதியில் 'சதொச' விற்பனை நிலைய கட்டுமானப்பணியின் போது  அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.


-இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(29) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

இதன் போது தற்போது வரைக்கும் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என சுமார்  207 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் இது வரை  199 எலும்புக்கூடுகள் மனித புதை குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மன்னார் நீதவான் ரி.சரவணராஜா  மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர்டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா இணைந்த கொண்ட குழுவினர்  குறித்த அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜராகி அகழ்வு பணியினை  கண்காணித்து வரும் சிரேஸ்ட சட்டத்தரனிகள் நேற்றைய தினம் இவ் அகழ்வுப் பணியை கண்காணித்ததுடன் இதன் நிலமைகளையும் இதற்கு பொறுப்பாக இருக்கும் சட்டவைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரிய வருகின்றது.



மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு-(படம்) Reviewed by Author on October 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.