அண்மைய செய்திகள்

recent
-

கண் பார்வையை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?


கண் பார்வை குறைப்பாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இக்காலத்தில் உள்ள குறைப்பாடுகளில் ஒன்றாகும்.
இதற்கு காரணம் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு கொழுப்பு உணவுகளை பலரும் விரும்பி உண்ணுகின்றனர். இதனாலே கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகின்றது.

மேலும் கண் பார்வை பாதுகாக்க தினமும் ஒரு சில விஷயங்களை செய்வதின் மூலமாக ஆரோக்கியமான கண்களைப் பெறலாம்.
கண் பார்வையை பாதுகாக்க செய்ய வேண்டியவை
  • பெரும்பாலும் கணினி பயன்படுத்துபவர்கள் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. மேலும் அவர்கள் கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
  • வெளிச்சம் குறைந்த இடங்களில் படிப்பது மற்றும் மற்ற செயல்கள் செய்வதை தவிருங்கள். குறைந்த வெளிச்சத்தில் கண்களுக்கு வேலை கொடுப்பது நல்லதல்ல.
  • படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவை கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • கண்களில் அதிக அழுத்தமோ எரிச்சலோ உணர்ந்தால் உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள்.
  • கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.
  • தினமும் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். இல்லையென்றால் கண் பார்வை பாதிக்கப்படும்.
  • வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.
  • இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் இருந்து டிவி,கணினி, செல்போன் போன்றவற்றை பார்ப்பதை தவிருங்கள்.
  • ஒரு ரப்பர் பந்தை எடுத்து அதனை சுவற்றில் எரிந்து அந்த பந்து செல்லும் திசைகளிலெல்லாம் உங்கள் பார்வையை திருப்புங்கள். இது கண்ணுக்கான சிறந்த பயிற்சி.
  • அதிகரித்து வரும் தூசிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன், சுத்தமான நீரினால் கண்களை கழுவுங்கள்.
  • கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

கண் பார்வையை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்? Reviewed by Author on October 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.