அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை அமர்வில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்


மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களிடம் தொரிவிக்கப்படுவதில்லை எனவும் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாகவும் நகர சபையின் பொது நூலகத்திற்கு அருகாமையில் அமையவிருக்கும் அம்மாச்சி உணவகமானது பொருத்தமான இடத்தில் அமையவில்லை எனவும் அவ் உணவகமானது அமையும் பட்சத்தில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பெருத்தமான இடத்தில் இவ் உணவகத்தை மற்றி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்து 8 உறுப்பினர்கள் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்

மன்னார் நகர சபையின் 8 வது அமர்வு 22-10-2018  காலை 10.30 மணியளவில் நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது குறித்த அமர்வின்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆரயப்பட்டது

குறித்த அமர்வின் போது மன்னார் மவட்டத்தின் பொது நூலகத்திற்கு அருகாமையில் அம்மச்சி உணவகம் அமைவதற்கான வேலைகள் இடம் பெறுவதாகவும் அவ் வேலை திட்டத்திற்கான அனுமதியை யார் வழங்கியது எனவும் மக்களுக்கு பல்வோறு இடையூரை ஏற்படுத்த கூடிய பிரதான வீதியின் அருகில் நகரசபை உறுப்பினர்களிடம் கலந்தாலேசிக்காது எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்ட கட்டிடத்தை கட்டுவதற்காண ஓப்பந்தம் தொடர்பான விடயங்கள் உறுப்பினர்களுக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை எனவும் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மனால்  கேள்வி எழுப்பப்பட்டது

குறித்த கேள்விக்கு பதில் அளித்த தவிசாளர் குறிப்பிட்ட பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள காணி நகர சபைக்கு சொந்தமான காணி இல்லை எனவும் அவ் கட்டிடம் தொடர்பான செயற்பாடுகள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் மூலமே முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

தவிசாளருடைய கூற்றானது ஏற்று கொள்ள முடியாது எனவும் உணவகமானது நூலகத்திற்கு அண்மையில் அமைய இருப்பதினால் நூலத்திற்கு வரும் வாசகர்களுக்கும் மாணவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் பிரதான வீதிக்கும் மன்னார் மத்திய நகர் பகுதியில் அமைவதனாலும் அதீத போக்குவரத்து நேரிசல் ஏற்படும் எனவும் கழிவுகளை ஒழுங்கன முறையில் அகற்ற முடியாது அத்துடன் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும் எனவும் உப தவிசாளர் உட்பட பல்வேறு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதனால் குறித்த உணவகமானது மன்னார் மக்களுக்கு கட்டயம்
தேவையானது ஆனாலும் தற்போது கட்டப்படும் இடமானது பெறுத்தம் அற்ற இடம் எனவும் அதனால் குறித்த பணியை நிறுத்தி விட்டு மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாத  வெறு மத்திய பகுதியில் அமைப்பதற்கான தீர்மானம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது ஆனலும் குறித்த தீர்மானத்தை ஆளும் கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் வேறு காணிகள் மன்னார் நகரசபைக்கு அண்மையில் இல்லை எனவே நிதியானது திரும்பி பேய்விடும் என்ற பெருத்தம் அற்ற காரணங்களை கூறி எதிர்க முடியாது எனவும் தெரிவித்தனர் இதனை அடுத்து சபையில் சலசலப்பு ஏற்ப்பட்டது

நிதி திரும்பிவிடும் என்பதற்காக மக்களுக்கு பெருந்தாத அபிவிருத்தி திட்டங்களை ஒரு போதும் மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் ஆதரிக்க போவதில்லை எனவும் தொடர்ச்சியாக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து இன்றைய அமர்வில் இருந்து 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

குறித்த அம்மச்சி உணவகம் அமையவிருக்கும் இடம் தொடர்பான எதிர் மறையான விமர்சனங்கள் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்கள் மூலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.








மன்னார் நகர சபை அமர்வில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் Reviewed by Author on October 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.