அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முதல்முறையாக...மன்னார் சுப்பர் லீக்(MSL-T20) கிரிக்கெட் சுற்றுத்தொடர்.....


மன்னார் சுப்பர் லீக்(MSLt20) MANNAR SUPER LEAGUE கிரிக்கெட் சுற்றுத்தொடர் பருவகாலம்-1 அங்குரார்பனநிகழ்வு

மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கமானது வடக்குகிழக்கு மாகாணங்களின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இருபதுக்கு இருபது தொழில் முறையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை இம்மாதம் நடாத்தவுள்ளது.

இதன் முதல் கட்டமாகஅதன் அங்குரார்ப்பனநிகழ்வானது (04-10-2018) மாலை 6.00 மணிக்கு யூலிஹொட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்டகிரிக்கெட் சங்கநிர்வாகிகள் அணி உரிமையாளர்கள்-அனுசரனையாளர்கள்-பத்திரிகையாளர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இந்நிகழ்வில்
01.    சுற்றுப்போட்டி இலட்சினைஅறிமுகம்
02.    சுற்றுக் கிண்ணம் அறிமுகம்
03.   www.mslt20.com-இணையதளம் அறிமுகம்
04.    அணிகளின் அணிசீருடைஅறிமுகம்.
  • MANNAR FIGHTERS
  • MANTHAI COBRAS
  • MADHU PHOENIX
  • NANADDAN EAGLES
05.    வீரர்களின் ஏலம் என்பனவும் நடைபெற்றது.

மொத்தமாக நான்கு அணிகளைகொண்டு நடைபெறவுள்ள இந்தசுற்றுத்தொடரில் ஒவ்வொருஅணியையும் வெவ்வேறுஉரிமையாளர்கள் கொள்வனவுசெய்துள்ளார்கள். ஓவ்வொருஅணியிலும்உரிமையாளர் உட்பட 16 வீரர்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதில் அணி உரிமையாளரோடு சேர்த்து பாடசாலைவீரர் ஒருவர் கழகவீரர் ஒருவருமாக மொத்தமாக 03 வீரர்கள் அணிபட்டியலில் உள்ளவாங்கப்பட்டநிலையில் ஏனைய 13 வீரர்களுக்கானஅதாவது நான்கு அணிக்கும் சேர்த்து 52 வீர்ர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த 52 வீரர்களுக்காகமன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 76 வீரர்கள் விண்ணப்பித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

அணிவிபரம் மற்றும் வீரர்களின் விபரங்கள.......




வை.கஜேந்திரன்
மன்னாரில் முதல்முறையாக...மன்னார் சுப்பர் லீக்(MSL-T20) கிரிக்கெட் சுற்றுத்தொடர்..... Reviewed by Author on October 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.