அண்மைய செய்திகள்

recent
-

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் முசலி பிரதேச பாடசாலைகளின் மாணவர்களுக்கான..படங்கள்


உலக சிறுவர் தினத்தை  சிறப்பிக்கும் வகையில் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பாடசாலைகளின் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கிங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட்  பதியுதீன் அவர்களின்  அனுசரணையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களினால் 01-10-2018 நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர் தினத்தை கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் புதிய ஒரு மகிழ்ச்சியை மற்றும் கற்றலுக்கான ஆர்வத்தை தூண்டும் நோக்குடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500ம் மேற்பட்ட மாணவர்களுக்கு இப் புத்தகப்பை மற்றும் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் " ஒரு நாட்டிற்கு எவ்வாறு சுதந்திர தினம் கொண்டாடுவது அவசியமான ஒன்றோ அதே போன்று சிறுவர் தினத்தினை கொண்டாடுவதும் அவசியமாகின்றது எமது நாட்டின் பொக்கிஷங்கள் எதிர்கால தலைவர்கள் இன்றய சிறுவர்களே  இன்று உங்களுக்கு தெரியும் நாட்டில் பல பாகங்களில் சிறுவர்களுக்கான வன்முறைகள் அதிகம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது படிக்கும் காலங்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மன ரீதியாக உடல்ரீதியாக அவர்களை துன்புறுத்துவது போன்றவற்றை நாங்கள் முற்றாக தவிர்த்து அதற்கெதிராக  போராட வேண்டும்.

 இன்று நாங்கள் அவர்களுக்கு  எவற்றை கற்றுக்கொடுக்கின்றோமா அவைகள்தான் நாளை எம் கண்முன்னே விளைவாக காட்சியளிக்கின்றது சிறுவயதில் ஒழுக்கத்தை ஒரு மாணவனுக்கு கற்றுக்கொடுத்தால் அவன் எதிர்காலத்தில் ஒழுக்கமுடைய ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடியவனாக இருப்பான் அதேபோன்று தவறான நடவடிக்கைகளை அவர்களின் மனதில் பதிய வைத்தால் எமது சமூகத்தின் ஒரு கருப்பு புள்ளியாக இருப்பான் எனவே நாம் எமது எதிர்கால சமூகத்தை இன்றிலிருந்தே வடிவமைக்க வேண்டும் ஒவ்வொரு சிறுவர்களும் சிறந்த ஒரு நிலைக்கு வர நாங்கள் திட்டமிட வேண்டும் எனவே ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும் பெற்றோர்கள் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்.

 உங்கள் குழந்தைகளை ஒரு ஒழுக்கமுள்ள சிறந்த தலைமைத்துவ பண்புடைய தலைமுறையாக உருவாக்க வேண்டும் எனவும் ஏனைய பிரதேசங்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இவ்வாறான புத்தகப்பை வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார் 

மேலும் இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப்  பணிப்பாளர் முனவ்பர் முசலி பிரதேச சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராளிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 









உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் முசலி பிரதேச பாடசாலைகளின் மாணவர்களுக்கான..படங்கள் Reviewed by Author on October 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.