அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மாணவனுக்கு கிடைத்த நாற்பது இலட்சம் -


இம்மாதம் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பெருமளவான மாணவர்கள் திறமைச் சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்திருந்தனர்.

மேலும், இந்த பரீட்சையில் விசேட தேவையுடைய பல மாணவர்களும் சிறந்த சித்திகளைப் பெற்றதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த லிந்துலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வகுமார் நிரஞ்சன் என்ற மாற்றுத்திறனாளியான மாணவனுக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளார். 22 மாணவர்கள் குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய போதும், அதில் இம்மாணவர் மட்டுமே சித்தி பெற்றுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் அமைச்சர் பழனி திகாம்பரத்தை சந்தித்த குறித்த மாணவன் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
அதன் பின்னர், கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மாணவன் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குவதாகவும், தனது அமைச்சின் கீழ் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு மற்றும் மாணவன் கல்வி பயில்வதற்காக மாதாந்தம் தனது சொந்த நிதியில் இருந்து ஐயாயிரம் ரூபா என இதர பல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளியாக இருந்து இவ்வாறான சாதனைப் படைத்தவர்களுக்கு பெருந்தொகையான நிதியை செலவிட்டு உதவி செய்து, அது வெளிப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் இவ்வாறான உதவிகள் செய்யப்பட்டிருப்பினும், அது இதுவரையில் வெளியுலகினர் அறிந்திராத ஒன்றாகவே காணப்படுகின்றது.
மேலும் இதுபோல பல விசேட தேவையுடைய மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ள நிலையில் பல தலைவர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்பது பலரது கோரிக்கையாகவுமுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட ராகினி என்ற மாணவி தற்போது இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனைப் படைத்துள்ளார், இவர் போன்றவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பதோடு இனி வரும் காலங்களில் தமது கல்வி நடவடிக்கைகளை அவர் சிறந்த முறையில் முன்னெடுக்க வழிவகைகளை உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மாணவனுக்கு கிடைத்த நாற்பது இலட்சம் - Reviewed by Author on October 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.