அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர் தினத்தையொட்டி முன்னாள் போரளிக்கு சுய தொழில் உதவி வழங்கி வைப்பு-படங்கள்



வடமாகாணம் முழுவதும் மாவீரர் தினத்தையொட்டி மாவீரர்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் பல்வேறு உதவி திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் சுய தொழில் உபகரணங்கள் பொது அமைப்புக்களாலும் புலம் பெயர் உறவுகளாலும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாச்சிக்குடா பிரதேசத்தை சேர்ந்த 2007 ஆம் ஆண்டு விடுதலை போராட்டத்தில் இணைந்து போராட்ட களத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதரத்தை கொண்டு நடத்துவதற்கான படகு மற்றும் இயந்திரம் ஒன்றும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்ததிம் பின்னர் கால்கள் இரண்டையும் இழந்த பின்னர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு ஒரு நபருடன் கூழி தொழிலாளியாக கடற் தொழிலி ஈடுபட்டு வந்ததை அடுத்து கனடா வாழ் காலையடி உதவும் கரங்கள் அமைப்பின் ஊடக குறித்த போராளிக்கு மீன் பிடி உபகரணங்கள் வழங்கு வைக்கப்பட்டது

முன்னாள் வடமாகண உறுப்பினர் பா. டெனிஸ்வரன்  முன்னாள் போரளிக்கான உபகரணங்களை நேரில் வருகை தந்து வழங்கிவைத்தார்.

உதவியினை பெற்று கொண்ட முன்னாள் போராளியின் மனைவியும் இறுதி யுத்ததின் போது காயப்பட்டு தற்போதுவரை கால் ஒன்றில் பாதிப்போடு வாழ்ந்து வருகின்றார்.





மாவீரர் தினத்தையொட்டி முன்னாள் போரளிக்கு சுய தொழில் உதவி வழங்கி வைப்பு-படங்கள் Reviewed by Author on November 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.